31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

இதோ எளிய நிவாரணம்! முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்!

முகத்தில் திடீர் என்று காட்சியளிக்கும் பருக்களை மாயமாக செய்ய தக்காளி ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

தக்காளியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்பு சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

தக்காளியுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் பலன்கள் அதிகம்.

தக்காளி மற்றும் தேன்

தக்காளி மற்றும் தேன் கலந்த கலவை முகத்தில் தோன்றும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.

தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும்.

ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவுங்கள்.

இந்த முறையை வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளைச் சரி செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது.

ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறினை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது.

ஓட்ஸ்

ஓட்ஸ் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற ஓட்ஸ் உதவும். 2 தக்காளியின் சாற்றை எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டியளவு ஓட்ஸ் சேர்த்துக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து கழுவுங்கள்.

குறிப்பு

தொடர்ந்து இவற்றை செய்வதால் அலர்ஜி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விடுங்கள்.

Related posts

ஆலிவ் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தினால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய

sangika

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

நைட் தூங்கும் போது இப்படி ஃபுரூட் ஃபேஷியல் போடுங்க.. சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா! இந்த வடிவ பற்களை உடையவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்!

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

ஒரே வாரத்தில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

பெண்களே உங்கள் முகத்தை பொலிவாக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

beauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி?

nathan