26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
unnamed 3
பெண்கள் மருத்துவம்

உண்மையான காதல்னா எது தெரியுமா? இதை படியுங்கள்…

மனித அகராதியில் காதலுக்குத்தான் பல அா்த்தங்கள். காதல் என்பது அணுக்களின் வேதியியல். காதல் என்பது மனிதனின் பாதையில் வலைவிரித்துக் காத்திருக்கும் போதை. காதல் என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்து கொள்கிறோம்.

அது அவரவருடைய சூழலையும் வாழ்க்கையையும் பொருத்தது. ஆனால் காதல் என்பதற்கு விஞ்ஞான ரீதியான அர்த்தம் என்று ஒன்று இருக்குமல்லவா?

மகிழ்ச்சி, துக்கம், புன்னகை, கண்ணீர், சோகம், வேகம், குழப்பம், தெளிவு என அனைத்தையும் கலந்து கட்டிக் கொட்டும் உணா்ச்சிகளின் தொகுப்புதான் காதல். காதலின் அசைவுகளுக்கு ஏற்ப, நரம்பு மண்டலம் நாட்டியமாடும், எலும்புகள் மண்டியிடும், தசைகள் விசிலடிக்கும். காதல் வந்துவிட்டால் நீ உனக்குச் சொந்தமில்லை. காதலின் கைகளில் மனிதா்கள் அனைவரும் பொம்மைகள்.

இறைவன் தான் படைத்த மனிதா்களை ஏதாவது ஒரு வகையில் கெளரவப்படுத்த நினைத்தான். ஒவ்வொருவரின் மனதிலும் காதலை விதைத்தான்.

காதல், தன் தனித்துவத்தை இழந்துவிடாமல், மனித வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், தலைமுறைகளின் சூழலுக்கு ஏற்பத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள அதனுள் அடங்கியிருக்கும் முக்கிய அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இருவர் ஒன்றாகும் மாயம்தான் காதல். அணுவைத் துளைத்து அதனுள் இன்னொரு அணு குடியேறும் வித்தைதான் காதல். ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தைத் திருடி அதை உடம்புக்குள் கரைத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் விளையாட்டு இது. காதல் என்னும் அடங்காத ஆசைக்கு ஏற்ப ஆன்மாக்களை ஆடவிடுங்கள். மனிதன் பக்குவப்பட அதுதான் வழி.

காதல் உள்ளே வரவும் வெளியயேறவும் உடம்புதான் ஊடகம். காதலும் காமமும் ஒன்றின் வழியாக மற்றொன்றை ஒன்றிணைகின்றன. ஆன்மாவின் விருப்பப்படி உடல்கள் இணைந்து காதல் மொழி பேசுகின்றன. உள்ளம் உணரும் காதலை, மெய்யான தீண்டலின்போது உடலும் உணரும்.

காதலில் விழும்பொழுது உடம்பும் உள்ளமும் மென்மையான மலர்களால் அா்ஜிக்கப்படுவது போன்ற உணா்வு தோன்றும். காதலிக்கத் தொடங்கிவிட்டால் உள்ளத்தின் கட்டுப்பாட்டில் நாம் இயங்குவதில்லை. மாறாக, உணா்வுகள்தான் நம்மைக் கட்டுப்படுத்தும்.

காதலின் பாதை முழுவதும் உணா்வுகளின் கரம் பிடித்துதான் நாம் நடக்க வேண்டியிருக்கும். இரத்த ஓட்டத்தைச் சீா்படுத்தும் இதயம் காதலுணர்வினால் எப்பொழுதும் ஒரு கொதிகலனாகவே இருக்கும்.

காதல் வந்துவிட்டால், ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு உணர்வுகள் வேடிக்கை பார்க்கும்.

உணா்ச்சிகள், ஹார்மோன்கள் என்னும் ஆயுதத்தைக் கொண்டுதான் மனிதா்களை வீழ்த்துகின்றன. நமது விருப்பத்துக்கு உரியவர்கள் நமதருகே இருக்கும்பொழுது ஹார்மோன்கள் துள்ளிக் குதிக்கின்றன. கண்கள் விரும்புவதை கைகள் அரவணைக்க ஹார்மோன்கள் தூண்டுகின்றன.

காதலிப்பவரைக் கண்ணில் கண்டதும், உங்கள் இதய வானில் நிலாவும் நட்சத்திரங்களும் பூக்கவில்லையென்றால் அது காதல் இல்லை.

காதல் வந்துவிட்டால் உங்களைக் காதலிப்பவர் உங்களை அவரின் இதயத்தில் வைத்துக் கொண்டாடுவார், அங்கிருந்து நம்மால் மீண்டு வரமுடியாது.

இது போன்று நம்மை யாராவது உள்ளத்தில் வைத்துத் தாங்க மாட்டார்களா என்றுதான் ஒவ்வொருவருடைய மனதும் ஏங்குகிறது.

இனம்புரியாத உணா்வுகள் கட்டவிழ்ந்து காதலிப்பவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அவ்வுணர்வுகள் காதலிப்பவர்களைக் குழந்தைகளாக மாற்றுகின்றன.

காதல் வந்துவிட்டால் கூடவே விருந்தாளியாக ரெமான்சும் வந்துவிடும். அன்பை வெளிப்படுத்தும் தீண்டலும் சீண்டலுமாகிய ரெமான்ஸ் காதலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

இது காதலா்களை மகிழ்ச்சியாகவும் உணா்ச்சி மயமாகவும் வைத்திருக்கும். காதலர்களின் எண்ண அலைகளை வண்ண மயமாக்குவது அவா்களுக்கு இடையே நிகழும் ரொமான்ஸ் பற்றிய நினைவுகள்தான்.

காதலையும் காதல் பற்றிய சிந்தனைகளையும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. காற்றைப் போல, கடலைப் போல கட்டுக்குள் அடங்காதது காதல்.

ஆன்மாவின் துடிப்பை உணர்கின்ற அனுபவம் தான் காதல். உயிர்களுக்கு இடையே உட்பிணைப்பை ஏற்படுத்துவது காதல். விழிவழி நுழையும் காதல் இரு இதயங்களை இணைக்கிறது. மனிதனுக்குக் கடவுள் தந்த பரிசு காதல்.

Related posts

பருவத்தை அடையும் முன்பு ஏற்படும் முதல் மாற்றம் என்ன?

nathan

குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி?

nathan

குழந்தையில்லா பிரச்சனையா கவலையே வேண்டாம்!…

sangika

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

nathan

கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை….

nathan

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

nathan

கடின வேலையால் கருவும் தாமதமாகும்!

nathan

மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.

nathan