27.1 C
Chennai
Saturday, May 24, 2025
பழரச வகைகள்

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு… என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க…

[ad_1]

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு... என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க.

கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் உடலில் வறட்சி ஏற்படவும் ஆரம்பிக்கும். அப்போது வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தால், தாகம் அதிகரிக்கும். ஆகவே அந்த நேரம் நிறைய தண்ணீர் குடிப்போம். ஆனால் அவ்வாறு எப்போதுமே தண்ணீர் குடிக்க முடியாது. எனவே அப்போது பலர் ஜூஸ் குடிக்க ஆசைப்படுவார்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் கடைகளில் கார்போனேட் கூல்ட்ரிங்ஸ், ரஸ்னா, சர்பத் போன்றவை விலை மலிவாக கிடைக்கும். எனவே மக்கள் பலர் அதனையே வாங்கி சாப்பிடுவார்கள். அத்தகைய பானங்களில் எந்த ஒரு சத்துக்களும் கிடையாது,
நோய்கள் தான் உள்ளன. ஆகவே உடலை ஆரோக்கியமாகவும், நோயில்லாதாகவும் வைப்பதற்கு பழங்களை வைத்து ஜூஸ் குடித்தால் நல்லது. இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, உடலும் நன்கு வலுவோடு இருக்கும். மேலும் பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன என்பது நன்கு தெரியும். ஆனால் அவற்றில் சத்துக்கள் மட்டுமின்றி, வயிற்றையும் நிறையச் செய்யும். சரி, இப்போது எந்த பழ ஜூஸில் என்ன நன்மைகள் நிறைந்துள்ளன என்பதைப் பார்ப்போமா!!!

ஆப்பிள் ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைய உள்ளது. ஆகவே மூட்டு வலிகள், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

ஆப்ரிக்காட் ஜூஸ் 

ஆப்ரிக்காட்டில் வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் கே போன்றவை உள்ளது. இதனால் இந்த பழ ஜூஸை குடித்தால், முதுமைத் தோற்றம் நீங்கி, எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, சருமம் மற்றும் கூந்தல் பொலிவோடு இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், அனீமியா மற்றும் மாதவிடாய் பிரச்சனை போன்றவையும் சரியாகும்.

ப்ளாக்பெர்ரி ஜூஸ் (Blackberry Juice)

இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், உடலில் நோயை உண்டாக்கும் செல்களை அழித்து, புற்றுநோய் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் இது நீரிழிவு நோயாகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஜூஸ். அதுமட்டுமின்றி இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.

திராட்சை ஜூஸ்

திராட்சை ஜூஸில் வைட்டமின்களை தவிர, கால்சியம், காப்பர், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இதனை குடிக்கும் போது, மலச்சிக்கல், இதய நோய், உடல் வறட்சி, ஆர்த்ரிட்டிஸ், வாத நோய், கல்லீரல் பிரச்சனை மற்றும் பல அழற்சிகள் குணமாகிவிடும்.

கிவி ஜூஸ் 

கிவியில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் சரியாகிவிடும். இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும்.

எலுமிச்சை ஜூஸ்

எப்போதும் எலுமிச்சை ஜூஸை தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய எலுமிச்சை ஜூஸை குடித்தால், அதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது செரிமானத்தையும் அதிகரிக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். மேலும் இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, கனிமச்சத்துக்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி சீராக செயல்பட வைக்கிறது.

பீச் ஜூஸ்

பீச் பழத்தால் செய்யப்பட்ட ஜூஸை பருகினால், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மனதில் ஏற்படும் கவலை மற்றும் அழுத்தம் போன்றவை குணமாகும்.

பேரிக்காய் ஜூஸ்

இந்த பழச் சாற்றில் போதுமான அளவில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளன. அதிலும் இந்த ஜூஸ் ஆர்த்ரிட்டிஸ், வாத நோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும். மேலும், இது உணர் இரத்த அழுத்தத், பெருடகுடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணமாக்கும் சிறப்பான பானமாக உள்ளது.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, இரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்க சிறந்தாக உள்ளது.

பப்பாளி ஜூஸ்

பப்பாளியில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே பப்பாளியை ஜூஸ் போட்டு குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

[ad_2]

Source link

Related posts

தேவையான பொருட்கள்:

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

nathan

மாம்பழ பிர்னி

nathan

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

nathan

அரேபியன் டிலைட்

nathan

அன்னாசிப்பழம் பயன்பாடுகள்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan