28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
no7n
பெண்கள் மருத்துவம்

உங்களுக்கு தெரியுமா 7 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

ஏழாம் எண்

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் எண்காரர்கள் ஆவர். இவர்கள் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் முகம் எதையோ பறிகொடுத்தவர்கள் போலத் தான் இருக்கும். மனதில் எதாவது ஒன்றை நினைத்து ஒரு வித சஞ்சலத்துடன் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகம். அதனால் மந்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு.

இவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் கண்ணில் விசித்திரமாக ஏதாவது ஒன்று பட்டால் உடனே அதை பற்றி ஆராயத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் மற்றவர்களை போல் அல்லாமல் எதிலும் புதுமையான கருத்துக்களை கொண்டு இருப்பார்கள். இவர்களின் மனம் எதையாவது ஒன்றை அசை போட்டுக்கொண்டே இருக்கும்.

இவர்கள் தனிமை விரும்பிகள். ஆடம்பரமாக இருக்க பிடிக்காது. அதிகம் மலைப் பிரதேசங்களை விரும்புவார்கள். இயற்கையை அதிகம் நேசிப்பார்கள்.

எல்லோரிடமும் உண்மையாகத் தான் நடந்து கொள்வார்கள். செய் நன்றி மறவாதவர்கள். தங்களால் முடியாததை, முடியாது என்று வெளிப்படையாக சொல்லி விடுவார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு இசையில் அதிக நாட்டம் இருக்கும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் எல்லாம் அக்கறை கொள்ளாதவர்கள். தன் மனம் போன போக்கில் போய்க் கொண்டே இருப்பார்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.

எதை செய்தாலும் தானாகவே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதை செய்தும் காட்டுவார்கள். தன்னுடைய சூழ்நிலை சந்தோஷமாக அமையவில்லை எனில் பிறரை தொந்தரவு செய்யாமல் தனிமையாக இருக்க விரும்புவார்கள். சந்தோஷமான சூழ்நிலை கிடைத்து விட்டால் தன்னை சுற்றியிருக்கும் எல்லோரையும் சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சி அடைவார்கள்.no7n

இவர்களின் மனது நிலையாக இல்லாமல் மதில் மேல் பூனையாக இருக்கும்.தான் உதவி செய்வதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயர் கிடைப்பது அரிது. இவர்களின் வாழ்க்கை துணை இவர்கள் விரும்பும்படி சரியாக அமையாது. இருந்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்வார்கள். வைராக்கியமும், தைரியமும் கொண்டவர்கள் இவர்கள். குழந்தை உள்ளம் கொண்டவர்கள்.

இவர்களுக்கு கோபம் மூக்கின் மேல் வரும். இவர்களிடம் இருக்கும் விளையாட்டு புத்தியால் பெரிதும் கெடுவார்கள். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் கொண்டவர்கள். எந்த ஒரு காரியத்தையும் அவசர படாமல் நிதானமாக செய்து வெற்றி அடைவார்கள். இந்த எண்ணில் பிறந்த பலர் தங்கள் குடும்பத்தை சரியாக கவனித்து பராமரிக்க மாட்டார்கள். நகைச்சுவை உணர்வு மிகுந்து இருக்கும்.

இவர்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பை, அலர்ஜி, அல்சர் போன்ற நோய்கள் வரலாம். தோல் வியாதிகள், நரம்புத் தளர்ச்சி கூட ஏற்படலாம்.

Related posts

திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் தெரியுமா?…

sangika

பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன!

sangika

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!

nathan

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது!…

sangika

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் கற்றாழை

nathan

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

nathan

கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை….

nathan

குழந்தையின்மை குறை போக்க……..நீங்க ரெடியா,,,,,,,,,,,,,?

nathan