29.2 C
Chennai
Saturday, Jul 5, 2025
11 1449819718
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு உணவை உண்டாலும் அல்லது எந்த செயலை மேற்கொண்டாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையை அடைந்து, அதனால் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பலரும் தனிக்குடித்தனம் வந்துவிடுவதால், எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று சொல்ல அருகில் பெரியோர்கள் யாரும் இல்லை. எனவே தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக, தமிழ் போல்ட்ஸ்கை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தவிர்த்திடுங்கள்.

காபி
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

குறிப்பிட்ட மருந்துகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு மாத்திரையை எடுத்தாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் செல்லும். சில நேரங்களில் உங்கள் குழந்தையின் பால் பற்களில் கருப்பு நிற கறை இருப்பது போன்று தெரியும். அப்படி தெரிந்தால், அதற்குஅந்த மாத்திரை தான் காரணம். அதுமட்டுமின்றி, தாய் எடுத்த மாத்திரையின் பக்க விளைவு குழந்தைக்கும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்ட மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.11 1449819718

பூண்டு பூண்டு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட, குழந்தைக்கு அது பிடிக்காமல் போகலாம். அப்படி உங்கள் குழந்தைக்கு பூண்டு பிடிக்கவில்லையெனில், தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கும். எனவே நீங்கள் பூண்டை உணவில் அதிகம் சேர்த்து, உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, நீங்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பாதரசம் நிறைந்த உணவுகள் மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இருப்பினும் அதில் பாதரசம் அதிகம் உள்ளது. பொதுவாக கர்ப்ப காலத்தில் தான் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்க சொல்வார்கள். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் இதனை தவிர்க்க வேண்டும். சாதாரணமாக பாதரசம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும். அதிலும் அந்த பாதரம் பிஞ்சு குழந்தையின் உடலினுள் சென்றால், அது அவர்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் போதும், மீன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

காரமான உணவுகள் காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலில் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தாய்மார்கள் உட்கொண்டால், அது குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு வாயு உற்பத்தி செய்யும் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளான பீன்ஸ், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் இதுப்போன்ற வாயு உற்பத்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்கள் பால் மற்றும் பால் பொருட்களல் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிறைய குழந்தைகளால் மாட்டுப் பாலின் புரோட்டீனை செரிக்க முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்கள் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தையின் நலனுக்காக இவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

Related posts

வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

nathan

இருமலை மூன்றே நாட்களில் குணமாக்க வேண்டுமா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

nathan

வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள்!!!

nathan

படிக்கத் தவறாதீர்கள் குழந்தையின் வயிற்றில் பூச்சி இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்..

nathan

உங்களுக்கு தெரியுமா நீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்..!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan

கல்லீரல் பலவீனமாக உள்ளதாக அர்த்தம் -இந்த அறிகுறிகள் இருந்தால் கடந்து போக வேண்டாம்!

nathan