27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
stomach43434 600 jpg
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

உணவுகளினால் ஏற்படும் அலர்ஜியை கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். அதற்கு காரணம் அதனை நாம் உணவுநஞ்சேறல் என்று தவறாக நினைத்திருப்போம். இருப்பினும் உணவுநஞ்சேறலுக்கும் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜிக்கும் அடிப்படை வேறுபாடுகள் பல உள்ளது.

உணவு நஞ்சேறல் என்பது தூய்மையற்ற உணவுகளை உட்கொள்வதினால் ஏற்படுவது. ஆனால் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜி என்பது சில உணவுகளின் மீது ஏற்படும் விடாப்பிடியான எதிர் விளைவு. அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் மீது எதிர் விளைவை உண்டாக்கும்.

தங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, ஒரு உணவை, உணவாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், அந்த உணவை உட்கொள்ளும் போது ஒருவருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் அதனை அச்சுறுத்தல் வகையில் சேர்க்கப்படுகிறது. அதனால் அந்த உணவுகள் உங்கள் உடலில் நிழைய முற்படும் போது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி செயலாற்ற தொடங்கி விடும்.

பொதுவாக பசும்பால், முட்டை, மீன், கடலை பருப்பு, ஷெல் மீன், சோயா மற்றும் கோதுமை போன்ற சில உணவுகளால் அலர்ஜி உண்டாகும். ஒருவருக்கு ஏதாவது ஒரு உணவு அல்லது பல உணவுகளாலும் அலர்ஜி ஏற்படலாம். சில நேரம் இது மிகவும் ஆபத்தை உண்டாக்கிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க, சில பேர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கின்றனர்.

ஏனெனில் மூக்கு ஒழுகுதல், மூக்கடைத்தல், தும்மல், இருமல், மூச்சிறைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனைகளையும் கூட சில சந்திக்க வேண்டி வரும். உணவுகளினால் ஏற்படும் அலர்ஜியினால் சில ஆண்கள் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். அதனால் இரத்த அழுத்தம், லேசான தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளையும் சிலர் சந்திப்பார்கள். பல சூழ்நிலைகளில், எவ்வளவு கவனமாக இருந்தாலும் கூட, உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது.

லாக்டோஸ் சகிப்பின்மை லாக்டோஸ் சகிப்பின்மை என்பது பொதுவான ஒரு அலர்ஜியாகும். அதனை தினசரி சகிப்பின்மை என்றும் அழைக்கின்றனர். உங்கள் உடல் பால்வெல்லத்தை (லாக்டோஸ்) செரிமானம் செய்ய முடியாத நேரத்தில் இது உண்டாகும். லாக்டோஸ் என்பது பால் மற்றும் தயிர், மென்மையான சீஸ் போன்ற இதர பால் பொருட்களில் அடங்கியுள்ளது. வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி தான் இதற்கான முக்கிய அறிகுறிகள். உங்கள் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றை வைத்தே உங்களுக்கு ஏற்பட்டிற்கும் லாக்டோஸ் சகிப்பின்மையை உங்கள் மருத்துவர் கண்டறிந்து விடுவார்.

வாய்வு, தசைப் பிடிப்பு அல்லது வயிற்று பொருமல் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் உணவு உங்கள் செரிமான அமைப்படி அடையும் போது, வாய்வு, தசை பிடிப்பு அல்லது வயிற்று பொருமல் போன்றவற்றை அனுபவிக்க தொடங்குவீர்கள். கடலை பருப்பு போன்ற உணவு வகைகளின் தாக்கத்தினால் தான் வாய்வு பிரச்சனை ஏற்படுகிறது. வாய்வு என்பது சாதாரணமாகவே ஏற்படுவது தான். இருப்பினும் திடீரென உருவாகும் வாய்வு மற்றும் பொருமல் மூலமாக அளவுக்கு அதிகமாக வெளியேறும் வாய்வை வைத்து அலர்ஜியால் இது ஏற்பட்டுள்ளதா என்பதை நீங்கள் உணர முடியும்.stomach43434 600 jpg

குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு சில நேரம் உணவுகள் வயிற்றில் இருக்கும் போது அலர்ஜி ஏற்பட்டால், குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு போன்ற தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் ஆற்றல் திறன் மற்றும் உடலில் உள்ள நீர்மம் மிதமான அளவு முதல் அதிக அளவு வரை குறையும். செரிமாமின்மை அல்லது நீங்கள் உட்கொண்ட காம்ப்ளெக்ஸ் புரத்தத்தை செரிமானம் புரிய செரிமான அமைப்பின் இயலாமை போன்ற காரணங்களால் இது ஏற்படலாம்.

சரும அலர்ஜி உட்கொண்ட சில நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் உணவினால் ஏற்படும் அலர்ஜியின் அறிகுறிகள் தென்பட தொடங்கி விடும். அதனால் உணவினால் ஏற்படும் சரும ரீதியான தாக்கத்தை அறிந்து கொள்ளவும் அதனை வேறுபடுத்தவும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள், உங்கள் செரிமான அமைப்பில் நின்று விட்டால், ஒவ்வாமை ஊக்கிகள் உறிஞ்சப்பட்டு, குருதியோட்டத்தில் நுழைந்து விடும். அவை சருமத்தை அடையும் போது, தோல் அரிப்பு அல்லது படை நோய் ஆகியவற்றை உண்டாக்கும். இதனால் சருமத்தில் சொறி மற்றும் அரிப்பு உண்டாகும்.

இரத்தத்தில் தூய்மைக் கேடு
ஒவ்வாமை ஊக்கிகள் உறிஞ்சப்பட்டு குருதியோட்டத்தில் நுழையும் போது, அவை எப்படி செயலாற்றும் என்பதையும் உங்கள் மீது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் கண்டறிவது சிரமமாகி விடும். ஒவ்வாமை ஊக்கிகள் இரத்த குழாய்கள் வழியாக பயணிப்பதால், லேசான தலை பாரம், சோர்வு, வேகமான இதயத் துடிப்பு மற்றும் காப்புப்பிறழ்ச்சி போன்றவைகளை உண்டாக்கும். காப்புப்பிறழ்ச்சி என்பது இரத்த அழுத்தம் திடீரென குறைதல். மிதமான அறிகுறிகளோடு ஆரம்பித்தாலும் காப்புப்பிறழ்ச்சியின் தாக்கங்கள் கடுமையாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,வாய் மற்றும் தொண்டையில் கூரிய கூச்ச உணர்வுஅல்லது வயிற்று பகுதியில் சுகமின்மை.

Related posts

மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

nathan

வாழ்க்கையை வசப்படுத்த – 9 வழிகள்

nathan

தைராய்டு பிரச்சனை உள்ளவங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்…

nathan

இந்த அறிகுறி எல்லா உங்களுக்கு இருக்கா? உடனே டாக்டர பாருங்க!!!

nathan

பெண்களே ஏன் கருத்தரிக்க முடியவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க வாய் ‘கப்பு’ அடிக்க என்ன காரணம்ன்னு தெரியுமா?

nathan

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

nathan

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

nathan