36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

மூலிகை பொடிகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்..!!

நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. மேலும் இவை டயாபடீஸ் மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயத்தை காக்க, மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது.

பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. வில்வ பொடியை கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

அமுக்கரா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து.

சிறுகுறிஞ்சான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு தேக்கரண்டிகள் வீதம் குடித்து வர மிக விரைவிலேயே காய்ச்சல், ஜுரம் போன்றவை நீங்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணித்தாய் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

nathan

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய்

nathan

ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

nathan

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?தெரிஞ்சிக்கங்க…

nathan

அதிமதுரம்

nathan

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்!இதை முயன்று பாருங்கள்

nathan

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan

அடிப்பது தீர்வல்ல… அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

nathan

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan