30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ytt
அழகு குறிப்புகள்

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள்

ப்யூட்டி பார்லர் போனா கட்டுபடியாகுமா என்று தயங்குபவர்கள் அதிகம். இதோ இந்த டிப்ஸ் அப்படியான பட்ஜெட் பத்மாக்களுக்குத்தான். வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள் சில உங்களுக்காக.

ஹாஃப் வொயிட் பேக்

ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.
பலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும். வொயிட் மாஸ்க்
ytt
ஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ்.

கோக்கனட் மில்க் பேக்

இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

கிரீன் ஃபேஸ் பேக்

பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும்.

ஃப்ரூட்ஸ் மாஸ்க்

ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.
பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.
tgfhfgh
லைட் அண்ட் லிக்விடு பேக்

ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

மைல்டு ரெட் பேக்

ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.
பலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

Related posts

முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்து பணியை தொடங்கிய பெண்!

nathan

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

மருவை நீக்கியவர்களுக்கும், மருவைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும்…

nathan

கைகளை பராமரிக்க சில டிப்ஸ் கள் இதோ…

sangika

படுக்கையில் படு கிளாமராக பலான போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி புகைப்படம்..

nathan

மகளுக்கு நீரிழிவு நோய்: குடும்பத்துடன் நெசவாளர் தற்-கொலை

nathan

ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்……

sangika

சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு.. எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க..

nathan