29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இயற்கை குறிப்புகள்…!! சருமத்தை இளமையுடனும் பொலிவுடனும் வைக்க உதவும்

ஆரஞ்சு ஜூஸில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கலந்து,

பின் அதனை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து உலரவைத்து கழுவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி, ஏ மற்றும் கே சத்துக்களை வழங்கி சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து பின் கழுவினால் சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமமானது இளமையுடன் காட்சியளிக்கு.

வறட்சியுடனும், மென்மையிழந்து இருந்து சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மற்றும் முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பாதி ஆப்பிளை நறுக்கி, அத்துடன் 5 ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.

Related posts

பெண்களுக்கும் முகத்தில் ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?

nathan

உங்கள் கண்களில் ஏற்பட்டுள்ள‍ வறட்சியை போக்கி கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும்!…

sangika

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

முகம் சுழிச்சிடாதீங்க!நடிகை ஸ்ருதிஹாசனா இது?

nathan

ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அதனால் உண்டாகும் அதிசயிக்கத்தக்க பலன்களையும்…

sangika

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

nathan

nathan

இவ்வாரு 5 வழிகளிலும் உங்கள் அழகை பராமரித்து வந்தால் உங்கள் வயதை யாராலும் கண்டுபிக்கமுடியாது.

nathan

அழகு குறிப்புகள்….சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம்….

nathan