நமது உறவினர்கள் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில்.,
அவர்களுக்கு கீழ்காணும் நோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் சுமார் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குழந்தையின்மை மற்றும் குழந்தை பெறுதல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால் போன்ற காரணத்தால் மார்பக புற்றுநோய் இருக்கும் பட்சத்தில்., சினைப்பை புற்றுநோய்யானது ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹார்மோன் மற்றும் சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் சினைப்பை புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும். மேலும்., பெண்களின் உடல் எடையும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது.
சினைப்பை புற்றுநோயின் தோற்றங்கள் மற்றும் அறிகுறிகள் ஆரம்பத்தில் திடீரென தோன்றி மறைந்து விடும் தன்மையுடையது என்ற காரணத்தால்., பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோயின் பாதிப்பானது காலம் தாழ்த்தி கண்டறியப்படுகிறது.
சில பெண்களுக்கு புற்றுநோயின் பாதிப்பு துவக்கத்திலேயே கண்டறிப்பட்டு., அதற்குரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளும் பட்சத்தில்., சினைப்பை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்றனர்.
முதுகுவலி., இடுப்பு வளையத்தில் ஏற்படும் வலி., உடலின் கீழ் பகுதியில் திடீரென ஏற்படும் வலி., தாம்பத்தியத்தின் போது ஏற்படும் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறியை வெளிப்படுத்தும். இந்த வலிகள் அனைத்தும் சிறிசிறிதாக அதிகரிக்கும் பட்சத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தோன்றலாம்.
எந்த நேரத்திலும் உப்பு சுவை இருப்பதாக உணர்வது., இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சனை., வயிறில் ஏற்படும் வீக்கம்., சிறியளவு உணவு பொருட்கள் எடுத்துக்கொண்டாலும் பசியடங்கி போதல்., அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மூச்சுத்திறனால் போன்ற பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனைகள் ஏற்படும் அல்லது அதற்கான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை., தேவையான சிகிச்சை பெறுவது நல்லது.