தேவையான பொருட்கள்
சாதம் – 2 கப்,
கறிவேப்பிலை – 1 கப்,
கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
வெங்காயம் – 1,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயம் – சிறிதளவு,
முந்திரி – 5
எலுமிச்சை பழச்சாறு – 2டீஸ்பூன்,
நல்லெண்ணை – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1) சிறிதளவு நல்லெண்ணையில் கறிவேப்பிலையை வறுத்து, மைய பொடித்துக் கொள்ளவும்.
2) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
3) பிறகு நறுக்கிய வெங்காயம், பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
4) அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, மிளகுத்தூள், வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.
5) பிறகு ஆற வைத்த சாதத்தைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
6) ஆரோக்கியமான கறிவேப்பிலை சாதம் தயார்.