36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

பனிக்காலத்தில் அதிக சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும்.

இந்த பிரச்சனையை எப்படி எதிர் கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம்.

கற்றாழை
வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம் பொலிவுடன் வைத்துக்கொள்ள பெரிதும் கற்றாழை உதவுகிறது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்சனை சரியாகும்.

வேப்பெண்ணெய்
சரும வறட்சியால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் வேப்பெண்ணெய்யை கைகால்கள் மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி மாயமாக மறைந்து போய்விடும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் சுடவைத்து பின்பு அந்த எண்ணெயை உடல் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வரை காத்திருந்து, பின்பு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்து வரவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் வறட்சியை விரட்டி அடிக்கலாம்.

பப்பாளி
நன்றாக மசித்த பப்பாளியை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சரும வறட்சி மாறி முகம் எப்போது ஜொலிப்பாகவே இருக்கும்.

அவகோடா
ஒரு அவகோடா பழத்தை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

குறிப்பு
இயற்கை வழிகளை பின்பற்றுவதுடன் உடலுக்கு தேவையான அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை தினமும் உண்டு வர வேண்டும்.

தினமும் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தி வர வேண்டும். பனி காலத்தில் குளிப்பதற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவு, பயத்தமாவு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

Related posts

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

கரும்புள்ளியை போக்க வெங்காயமும் பூண்டும் போதும்!

nathan

சூப்பர் டிப்ஸ்! சிவப்பழகை எளிதில் பெற வேண்டுமா? அப்போ கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா? முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போடுங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்!முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் உப்பு

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan