29.3 C
Chennai
Saturday, Jun 15, 2024
0d79791be62a6b177a1fab271c
அழகு குறிப்புகள்

இதை முயன்று பாருங்கள்..எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!

பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

ஆப்பிள் பாதி, சிறிது அவகடோ பழம் இவற்றை நன்றாக மசித்து மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கழுவ வேண்டும். இது முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுபடுத்தும்.

வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.
0d79791be62a6b177a1fab271c
பப்பாளி ஃபேஷியல் செய்துகொள்வது நல்ல பலனை தரும். பப்பாளிப்பழக் கூழ், வாழைப்பழக் கூழ், ஒரு கேரட், மூன்று ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கழுவவேண்டும். இவ்வாறு செய்வதால் காலை முதல் மாலை வரை பளிச்சென முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் ஆசிட் முகத்துக்குப் பளபளப்பை உண்டாக்கும். வெறும் ஆரஞ்சு சாற்றை மட்டும் ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவினால் போதும். முகத்தில் உள்ள கருமை மறைந்து, ஒரே மாதிரியான சீரான நிறத்தைத் தரும். மூக்கின் மேல் வரும் வெள்ளை, கருப்பு புள்ளிகளைச் சரிப்படுத்தும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது எலுமிச்சை, சாற்றைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி, 10 நிமிடம் வைத்திருந்து கழுவவும். நன்கு காய்வதற்கு முன்பு எடுத்துவிடவேண்டும். ப்ளீச் செய்தது போல் முகம் பளிச் என கோதுமை நிறமாக மாறும்.

Related posts

ஒரு வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா? இந்த மாஸ்க் மட்டும் போதும்

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க. எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா

nathan

வெளியான அதிரடி அறிவிப்பு! நடிகர் விவேக் மரண வழக்கு!

nathan

கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!!

nathan

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் மீரா மிதுனின் மீது புகார் கொடுத்துள்ள ரவீந்திரன்!

nathan

புரட்டாசி மாத ராசிபலன் 2022 :12 பலன்கள்

nathan