35.4 C
Chennai
Monday, Jun 24, 2024
மருத்துவ குறிப்பு

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

 

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம் வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது.

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

* 5 கிராம் வெந்தயத்தை வேக வைத்துக் கடைந்து எடுத்து அதோடு போதிய தேன் சேர்த்து கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

* இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

* வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புசத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

* தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

* வெந்தயப்பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அடுக்களையிலுள்ள வெந்தயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள்பொதிந்திருப்பதை மனதில் வைத்து மறவாமல் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழ அனைவருக்கும் இயலும்.

Related posts

தும்மல் வர காரணங்கள்

nathan

குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உண்பது எதற்காக தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

அகத்திக்கீரை

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை தீவிரமாக இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் அற்புதமான ஒரு இலை எது தெரியுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!!

nathan

வீட்டுக்கு தேவை வெளிச்சம்

nathan

தெரிந்துகொள்வோமா? உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்தால் என்னாகும் தெரியுமா!

nathan