தொப்பை குறைய:
சுரைக்காயை இரண்டு வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்
வாயு தொல்லை நீங்க:
விளாம்பழத்தின் கொழுந்து இலைகளை பறித்து கசாயம் வைத்து சாப்பிடுவதால் வாயுத்தொல்லை நீங்கும்
குடற்புண் குணமாக:
வில்வப்பழம் ஓட்டை உடைத்து சதையை எடுத்து இதனுடன் சர்க்கரை சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புண் வாய்ப்புண் குணமாகும்
பசியின்மை:
சுண்டை வற்றல் கறிவேப்பிலை மிளகு சீரகம் வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம் தீரும்
வயிற்று வலி தீர:
மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்