23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவு

கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் இரத்த கசிவு
>பல கஷ்டங்களையும் இடர்பாடுகளையும் கடந்து தான் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவும் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் தான் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கருச்சிதைவு போன்ற ஆபத்துக்கள் நடப்படும் பெரும்பாலும் இக்காலத்தில் தான்.கருவுற்ற முட்டை தனக்கு தானே கர்ப்பப்பை சுவற்றில் பதிந்து கொள்ளும் போது, கர்ப்பமான ஆரம்ப காலத்தில் சிறிதளவு இரத்த கசிவு ஏற்படும். அது இயல்பான ஒன்றே. இந்த கசிவு மிகவும் வெளிறி போய் இருக்கும். அதே போல் அதே சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் இரத்த கசிவு ஏற்பட்டால் அது பிரச்சனையாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனாலும் கூட அதனை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘மறைந்திருக்கும் பிரச்சனையை குறிக்கும் விதமாக கூட இருக்கலாம் இந்த பெண்ணுறுப்பின் இரத்த கசிவு. இது உங்கள் கர்ப்பத்திற்க்கே கூட ஆபாத்தாய் போய் முடியலாம். கர்ப்பமாக இருக்கும் போது புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் hCG (ஹ்யூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின்) என்ற இரண்டு ஹார்மோன்கள் தான் உங்கள் உடலை ஆட்சி செய்கிறது.

இந்த ஹார்மோன்களில் குறைபாடு இருந்தால் இரத்த கசிவு ஏற்படலாம். பளுவான பொருட்களை தூக்குதல், உடற்பயிற்சி அல்லது உழைப்பை செலுத்தும் போது கர்ப்பப்பையில் உள்ள சிசு வெளியேற்றப்படலாம். இதனால் இரத்த கசிவு ஏற்படும். அதனால் தான் கர்ப்பமான பெண்கள் கடினமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என டாக்டர் மெஹ்டா அறிவுறுத்துகிறார்.

கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய் பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டத்தில் எழுச்சி இருக்கும். இந்நேரத்தில் பரிசோதனை அல்லது உடலுறவு கொள்ளுதல் போன்றவைகள் இரத்த குழாய்களை சீர்கெட செய்யும். இதனால் இரத்த கசிவு உண்டாகும். இவ்வகையான இரத்த கசிவு ஆபத்தானது அல்ல. குழந்தைக்கும் சிசுவிற்கும் கூட எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.

இருப்பினும் பாதுகாப்பாக இருக்க உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. பெண்ணுறுப்பு பகுதி அல்லது கர்ப்பப்பை பகுதியில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் இரத்த கசிவு உண்டாகலாம். இரத்த கசிவுடன் அரிப்பு மற்றும் அசௌகரியம் இருந்தால் உடனே உங்கள் மருத்துவரை சந்தித்து, மேலும் சிக்கல்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தொப்பை அதிகரிப்பை விட கொடுமை வேறு எதுவும் உண்டா? வாரம் 3 முறை இத குடிச்சா மாயமாய் மறைஞ்சி போய்விடுமாம்!

nathan

காக்காய் வலிப்பு வரக்காரணம் – தடுக்கும் வழிமுறைகள்

nathan

கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா?

nathan

கருப்பையை பாதுகாப்பு முறை

nathan

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கொய்யா தரும் குறைவில்லாச் சத்து!

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

எக்ஸிமா ( Eczema ) தோல் பராமரிப்பு.

nathan

120 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan