27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
tyuyt
அழகு குறிப்புகள்

oily skin சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…!

எண்ணெய் பசை அதிகம் உடைய சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவைப் பயன்படுத்துவது நல்லது.

எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளக்கும்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும்.

வெள்ளரிச்சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மை நன்கு குறைவடையும்.
ujhojikj
தக்காளிப்பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்தபின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டு விடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்ஸை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும்.

எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
tyuyt
சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

Related posts

வாழைப்பழத்தை இவ்வாறு சாப்பிட்டு பாருங்கள்

sangika

சந்தனம் ஏன் இவ்ளோ காஸ்ட்லியா இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?

nathan

ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?….

sangika

இதை நீங்களே பாருங்க.! துளி கூட மேக்கப் இல்லாமல் 15வயது பெண் போல் கியூட்டாக இருக்கும் நயன்தாரா.!

nathan

beauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி?

nathan

நகங்கள் உடைந்து போகிறதா…

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan