கருப்பை தோன்றும் நீர்கட்டிகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும்,அதன் அறிகுறிகள் பற்றியும் முந்தையகர்ப்பபை நீர்க்கட்டிகள் கட்டுரையின் தொகுப்பில் பார்த்தோம்.
இப்போது நீர்க்கட்டிகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.,,
கர்ப்பபையில் உருவாகும் 20% கட்டிகள் தானே கரைந்து போகக்கூடிய தன்மைகொண்டவை. ஆனால், சில கட்டிகள் கர்ப்பபையை பெரிதாக்கும் அளவிற்கு ஆபாயம் கொண்டவை. இன்ன காரணத்தால் தான் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகுகின்றன என்பது குறித்த தெளிவான முடிவு இல்லாவிட்டாலும், வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் இது போன்ற பிரச்னைகள் வருகின்றன என கூறப்படுகிறது. இவ்வாறான நீர்க்கட்டிகளை கரைக்க நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி உள்ளிட்ட தானியங்களைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்த வித உணவு முறைகளை பிள்ளைகளுக்கும்சிறுவயதிலிருந்தேகொடுத்து வருவதனால், வரும் காலங்களில் குழந்தையின்மை, கர்ப்பபை கோளாறுகள் உட்பட எந்த வித பிரச்னையும் அவர்களை அண்டாது. அடுத்து காய்கறிகள், பழங்கள், இரும்பு சத்து நிறைந்த கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதிலும், பூச்சிக்கொல்லி தெளிக்காத,இயற்கையான முறையில் கிடைக்கும் காய்கள், பழங்களை சாப்பிடுவது மிகச்சிறந்தது. உணவை தொடர்ந்து உடற்பயிற்சி காலை, மாலை என இரண்டு நேரமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
நீர்க்கட்டிகளை கரைக்க, நமது ப்பாரம்பரிய மருத்துவத்தில் பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
கச்சக்காய்
கழற்சிக்காய்
இலவங்கப் பட்டை
ஆளி விதைகள்
துளசி
நெல்லிக்காய் போன்றவற்றை தனி தனி மருத்துவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக.. நீர்க்கட்டிகளுக்கு மட்டுமல்ல, உடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கும் மைதா, வெள்ளை சர்க்கரை, ஜங் புட் , பாஸ்ட் புட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கெட்ட கொழுப்புள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.நீர்க்கட்டிகளால் மிக அதிகரத்தப்போக்கு, வலி ஏற்ப்பட்டால் கட்டாயம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.