32.1 C
Chennai
Saturday, Mar 14, 2026
ghg
அசைவ வகைகள்அறுசுவை

மட்டன் குருமா

என்னென்ன தேவை?

வேக வைத்த மட்டன் – 1/2கிலோ,
சின்ன வெங்காயம் – 20,
அரைத்த பச்சை மிளகாய் – 6,
தக்காளி – 2,
தேங்காய் – 1/2 மூடி,
கல்பாசி – 1 ,
மல்லித்தூள் – 1/2ஸ்பூன்,

சீரகத்தூள் , சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன் ,
க.எண்ணெய் – 100மிலி,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு.
தேங்காய்,
முந்திரிகள் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
ghg
எப்படிச் செய்வது?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் கழித்து இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து பின்பு தக்காளி சேர்த்துக்கொள்ளவும். பிறகு மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

Related posts

சீஸ் போண்டா

nathan

வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது….

sangika

சுவையான மங்களூர் முட்டை குழம்பு

nathan

மசாலா மீன் ப்ரை

nathan

சிம்பிளான… நாட்டுக்கோழி கிரேவி

nathan

சில்லி சிக்கன்

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan

அவித்த முட்டை பிரை

nathan