27 C
Chennai
Thursday, Nov 14, 2024
spf cream
அழகு குறிப்புகள்

நீங்கள் அறிய வேண்டியவை SPF மற்றும் டே க்ரீம்ஸ் பற்றி

ஆம், நிச்சயமாக! தினசரி தூசு மற்றும் மாசு ஆகியவற்றில் இருந்து உங்களை காக்க நீங்கள் அடுக்கடுக்காக ஒன்றன் மேல் ஒன்றை பூசி சருமத்துக்கு பளபளப்பை ஏற்றிக் கொள்ளும் மேக்கப் பொருட்கள் மட்டுமே போதுமா? சிந்தித்து பாருங்கள்! காஸ்மெட்டிக் பொருட்கள் சருமத்தின் களங்கங்களை வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் அவை சருமத்துக்குள் ஆழமாக சென்று ஊட்டமளிப்பதில்லை.

கடுமையான சூரிய ஒளி மற்றும் நச்சுக்களை வெளியிடும் நகர மாசு ஆகியவை உங்களது முக அழகினை குறுகிய மற்றும் நீண்ட காலத்துக்கு பாதிப்படைய செய்துவிடும். அது பற்றி இனி காண்போம்.

ftgrytபூமியின் ஓசோன் மட்டும் பாதுகாப்பு கேடயத்தை வழங்காவிட்டால் அல்ட்ரா வயலெட் (UV) கதிர்கள் நம் சருமத்தை தாக்கிவிடும். UVB கதிர்கள் வியர்க்குருவை ஏற்படுத்தும், UVA கதிர்கள் இன்னும் ஆழமாக நுழைந்து நீண்ட கால பாதிப்புகளான சுருக்கம் மற்றும் இள வயதிலேயே வயோதிக தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்திவிடும். SPF (சன் புரொட்டெக்ஷன் ஃபாக்டர் இன் சுருக்கம்) பாதுகாப்பு அரணாக செயல்பட்டு UVA மற்றும் UVB கதிர்களை சருமம் நேரடியாக உறிஞ்சிக்கொள்ளுதலை தடுக்கிறது அல்லது ஒளியை பிரதிபலிக்கிறது.

வெயில் காலத்தில் மட்டுமே UV கதிர்கள் சருமத்தை பாதிக்கும் என்பதில்லை. இவை குளிர்காலத்திலும் மேகமூட்டமான நாட்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தவே செய்யும். UVA கதிர்கள் கண்ணாடி ஜன்னல்களுக்கு உள்ளும் நுழையக்கூடியது. அதாவது நீங்கள் வேலைக்கு வண்டியில் செல்லும் போதும் அல்லது உள்ளுக்குள் ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்திருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படவே செய்யும்.

spf creamவெள்ளையான அல்லது வெயிலில் எளிதில் பாதிப்படையும் சருமத்துக்குத்தான் SPF தேவை என்று நினைப்பவரா நீங்கள்? ஸ்கின் கான்சர் வெள்ளையான சருமம் கொண்டவர்களுக்கு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்றாலும், UV கதிர்கள் சருமத்தில் சுருக்கத்தை அதிகரிப்பதுடன் அனைத்து சரும வகையையும் உலர செய்து விடும்.

சன் புரொட்டெக்க்ஷன் ஃபேக்டரை கணக்கிடுவது எவ்வாறு?

SPF ரேட்டிங்ஸ் 2 முதல் தொடங்கி 70 வரை உயர்கிறது மற்றும் அவை UVB கதிர்களின் தாக்குதல் பாதிப்பு மற்றும் எவ்வளவு நேரம் ஒருவர் வெய்யிலின் தாக்குதலை சந்தித்தார் என்பதை பொருத்து கணக்கிடப்படுகிறது. 15 முதல் 30 SPF போதுமான பாதுகாப்பினை வழங்குவதாக கூறப்படுகிறது

யாரெல்லாம் SPF அடங்கிய க்ரீமை பயன்படுத்த வேண்டும்?

அனைவருமே. சூரியனின் பாதிப்பு நாள்பட சேர்ந்துவிடும். SPF பாதுகாப்பு அல்லாத ஒவ்வொரு நாளும் சருமத்தில் உள்ள எலாஸ்டிக் தன்மையை பாதிக்கப்பட்டு அதனை சிதைத்து விடும். மேலும் நகரத்தில் வசிப்பவர்கள் தூசு மற்றும் மாசினால் ஏற்படும் கொடுமையை சந்தித்தாக வேண்டிய நிலையில் உள்ளனர். அது முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் படிந்து பருக்களை ஏற்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கிவிடும்.

இதற்கு சரியான தீர்வு, UV பாதிப்பினை எதிர்த்து போராட குறைந்தபட்சம் SPF 20 அடங்கிய ஒரு டே க்ரீமை தேர்ந்தெடுக்க வேண்டும். கூடுதலாக உங்களது க்ரீமில் இயற்கை உட்பொருட்களான ஆலோ வேரா போன்றவை அடங்கிய, அழற்சியை நீக்கும் மற்றும் குளிர்ச்சியூட்டும் குணம் கொண்ட பொருட்கள் அதில் இருந்தால் சருமத்துக்கு பாதுகாப்பு வளையத்தை அளித்து ஈரப்பதத்தை பராமரிக்க உதவிடும். ஆலோ வேராவில் ஆன்டியாக்சிடென்டுகள் மற்றும் மினரல்கள் அதிகம் அடங்கியுள்ளதால் சாதாரணமான சரும அழற்சிகளும் குணமாகிவிடும்.

சருமத்தில் ஈரப்பதத்தினை அதிகரிக்க, கறைகளை நீக்க மற்றும் சருமம் முதிர்ச்சியடைவதை தள்ளிப்போட ஆலோ வேரா உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அதில் விட்டமின்ஸ் சி மற்று ஈ மற்றும் பீட்டா கெராட்டின் அதிகம் உள்ளது. Lakmé 9to5 Naturale Day Crème இல் வலுவான SPF பாதுகாப்பு மற்றும் ஆலோ வின் புத்துயிரூட்டும் தன்மை நிறைந்துள்ளது. நகரத்தின் மாசு மற்றும் தூசியை நீங்கள் நாள் முழுவதும் எதிர்கொள்ள அது உதவுகிறது. Lakmé 9to5 Naturale Day Crème – சரியான டெக்ஸ்சர் மூலம் உங்களுக்கு சிறந்த துணையாக விளங்குகின்றது, முகம் மற்றும் கழுத்து பகுதிகளை ஈரப்பதத்துடன் வைத்து SPF 20 பாதுகாப்பினை தருகிறது.

உங்களது காலையை Lakmé 9to5 Naturale Day Crème உடன் ஒளியேற்றி – சூரியன் மறைந்த பின்னரும் ஜொலிக்கும் பொலிவை பெற்றிடுங்கள்!

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? பெற்ற தகவல்களை உங்களிடமே வைத்துக் கொள்ளாமல் தேவைபடுபவர்களுடன் அதனை பகிர்ந்து அவர்களையும் பயன் பெற செய்யலாமே!

Related posts

இயற்கை பருத்தி சேலைகள்

nathan

இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா ! க வர்ச்சியா ரூமுக்குள் நிற்கும் மீரா மிதுன் !!

nathan

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan

அடேங்கப்பா! அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறிய கவீன்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

nathan

சளி, இருமல் உங்கள பாடாய் படுத்துதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள!…

sangika

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர்

nathan