27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
coffee
oth

எச்சரிக்கை ஒருநாளைக்கு இவ்வளவு காபிக்கு மேல் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா?

கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமன் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பெருமளவில் சிதைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உடல்பருமனால் தாம்பத்ய வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களின் உடல் பருமன் அவர்களின் பாலியல் செயல்திறனை குறைப்பதோடு விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறது.

உடல் பருமன் என்பது அசாதாரணாமான அல்லது அதிகப்படியாக உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு ஆகும். இந்த அதிகளவு கொழுப்பால் ஆரோக்கிய சிக்கல்கள், நாள்பட்ட நோய்கள் என பல எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது. இந்த உடல் பருமன் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதிக உடல் பருமனான மக்கள் இருக்கும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இந்தியா உள்ளது.

ஆண்களின் பாலியல் வாழ்க்கையை அவர்களின் பருமன் எப்படி சிதைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆராய்ச்சி

சமீபத்தில் 10,000 ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சாதாரண எடை கொண்ட ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 2.6 சதவீதமும், உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 6.9 சதவீதமும் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் ஆண்களின் உடல் பருமனுக்கும், பாலியல் வாழ்க்கைக்கும் நேரடியாக தொடர்புள்ளது என்று கண்டறியப்பட்டது.

ஹார்மோன் கோளாறுகள்

உடல் பருமன் தாம்பத்ய வாழ்க்கையை பாதிப்பது மட்டுமின்றி பல ஹார்மோன் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக இந்த கொழுப்பு திசுக்கள் ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை பெண்களின் பாலியல் ஹார்மோனான ஒஸ்ட்ரோஜனாக மாற்றுகிறது. அதிகளவு கொழுப்பு திசுக்கள் ஓஸ்ட்ரோஜனின் உற்பத்தியுடன் தொடர்புடையது.

இடுப்பளவு என்ன சொல்கிறது?

மற்றொரு ஆய்வில் ஆண்களின் இடுப்பளவை பொறுத்து அவர்களின் பாலியல் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இடுப்பளவு 40 இருக்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை இடுப்பளவு 37 இருக்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட 22 சதவீதம் குறைவாக இருக்கிறது.

விதையுறுப்பு வெப்பம்

இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக உடல் பருமன் விதையுறுப்புகளில் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. உடல் பருமன் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிக இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது இது ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால் ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படுவது சிரமமானதாக மாறுகிறது. ஆண்கள் எடையை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

ஆரோக்கியமான உணவு

உடல் எடையை சீராக பராமரிக்க ஆரோக்கியமான உணவுமுறை என்பது மிகவும் அவசியமானதாகும். பழங்கள், காய்கறிகள், புரதங்கள், தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வதும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் உங்களின் எடையை சீராக பராமரிக்க உதவும்.

குறைவான காஃபைன்

காஃபைன் அதிகமாக இருக்கும் காபி மற்றும் பொருட்களை அதிகம் சேர்த்து கொள்வது உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும். ஒருநாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய காஃபைன் அளவு 300 மிகி மட்டுமே. இந்த அளவு அதிகரிக்கும் போது அது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும், எண்ணிக்கையையும் குறைக்கும்.

புகைபிடிப்பதை தவிர்க்கவும்

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முக்கியாய் பொருள் சிகரெட் ஆகும். புகைபிடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் நகரும் வேகத்தையும் குறைக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் முன் குறைந்தது மூன்று மாதமாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

போலேட் உணவுகள்

போலிக் அமிலம் குறைவாக இருப்பது விந்தணுக்களில் இருக்கும் குரோமோசோம்களுடன் நெருங்கிய தொடர்புடையது. போலிக் அமிலம் அதிகம் இருக்கும் பச்சை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், முழுதானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். ஒருநாளைக்கு குறைந்தது 400மிகி போலிக் அமிலம் எடுத்துக்கொள்ள வேண்டும்.coffee

source: boldsky.com

Related posts

பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி..!

nathan

ஆண்களுக்கு விந்தணு சக்தியைக் கொடுப்பதில் செலினியம் முக்கியம் பங்கு வகிக்கிறது.

nathan

அவசியம் படியுங்கள் ! விந்தணு உற்பத்தியை அதிகரித்து, வித்தகனாக மாற்ற உதவும் ஒரு அற்புத இலை!

nathan

சொந்த ஊரில் புது வீடு கட்டும் மணிமேகலை ஹுசைன்….

nathan

ரட்சிதாவை விவாகரத்து செய்ய தயாராகும் தினேஷ்..

nathan

தகவல்.. நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்!

nathan

sex vitamins food tamil :செக்ஸ் வைட்டமின்கள் உணவு

nathan

இத படிங்க! விந்தணு பற்றாக்குறையை பற்றி அந்த பின், அதை எப்படி அதிகரிப்பது

nathan

இன்றைய இளம் ஆண்கள் அதிகமாய் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்???

nathan