புழுக்கள் நமது உடலுக்குள் உணவு, தண்ணீரின் வழியாக தான் உடலை அடைகிறது.
குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு.
இது அதிகம் உடலில் இருந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்துவிடும். அதனால் சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும் எனப்படுகின்றது.
அதில் வயிற்று வலி, வாய்வு தொல்லை, வயிற்றுப் போக்கு, கெட்ட துர்நாற்றம், தொடர்ச்சியான பசி, நிம்மதியற்ற தூக்கம், தலைவலி, உடல் சோர்வு, இரத்த சோகை, காய்ச்சல், கால் வலி போன்ற நோய்களை சந்திக்க கூடும்.
இந்த பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- வாரம் இரண்டு முறை காலையில் சாப்பிடும் போது 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சாப்பிட்டு, பின் மூன்று மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குடித்து வர வேண்டும். முடிந்தால் இந்த செயலை தினமும் செய்து வரலாம்.
- பூண்டை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் எவ்வித புழுக்கள் இருந்தாலும் அழிந்துவிடும். அதிலும் அதனை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்துவிடும். அதற்கு ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வர வேண்டும்.
- பப்பாளி விதையை நன்கு உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 2 டீஸ்பூன் பப்பாளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.
- 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பூசணியின் விதையை வறுத்து, பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, காலையில் வாழைப்பழம் அல்லது கிவி பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை சாப்பிட்டு 15-20 நிமிடம் கழித்து, ஒரு டம்ளர் நீரில் 1 1/2 டீஸ்பூன் ஓமத்தை தட்டி சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், உடலை ஆரோக்கியமாக புழுக்களின்றி வைத்துக் கொள்ளலாம்.
- ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த வேப்பம்பூவை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து, வெள்ளை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இப்படி நான்கு நாட்கள் தினமும் இரண்டு முறை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள், புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
- கேரட்டை துருவி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். முக்கியமாக இதனை சாப்பிட்ட பிறகு எந்த ஒரு பொருளையும் காலை உணவாக எடுக்கக்கூடாது. இப்படி ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றிவிடலாம்.
- ஒரு கப் சூடான தண்ணீரில் 1 டீஸ்பூன் கிராம்பை பொடி செய்து சேர்த்து, 10-20 நிமிடம் மூடி வைத்து, தினமும் மூன்று முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், புழுக்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் மோரில் சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் அகலும்.
- தினமும் 4-6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வயிற்றில் உள்ள புழுக்களை எதிர்த்துப் போராடி அழிந்து வெளியேற்றிவிடும்.