பால் பவுடரை கொண்டு நாம் பல வகை ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். பால் பவுடர் உடன் நம் சமயலறையில் உள்ள மற்ற பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். இவ்வாறு பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள், அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குகின்றது.
இவ்வகை தொல்லையற்ற ஃபேஸ் பேக்குகளை ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பது மிகவும் சிறப்பானதாகும். நாம் நமது சருமத்திற்கு ஏற்ற வகையான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இப்பொழுது பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும்.
பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது 20 நிமிடங்கள் வரை காய வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவவும். இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
1 மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.
ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இது, சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.
ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக்கை தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.