27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
eye1 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

ஒரே நாளில் யாருக்குக் கண்களுக்குக் கீழே கருவளையம், கரும் புள்ளிகள் தோன்றிவிடுவதில்லை.

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டறிய முயன்றால், இதனை சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிதாக இருக்கும்.

 

eye1 1

கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருப்பது தூக்கம்தான். தினமும் ஆறு முதல் 7 மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம்.

வாரம் ஒரு முறை அரை மணி நேரம் வெள்ளரிக்காயை கண்களுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது நல்ல பலன் கொடுக்கும்.

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

கண்ணுக்கு நல்ல தரமான மைகளையே பயன்படுத்த வேண்டும், தினமும் அவற்றை படுக்கப் போகும் முன்னர் நன்றாக கழுவிவிட வேண்டும்.

அதேபோன்று கரும்புள்ளிகள் முகம் மட்டுமின்றி உடல் முழுவதும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கரும்புள்ளியால் அவஸ்தைப் படுபவர்கள் ஆரஞ்சு பழத் தோலை காயவைத்து அத்துடன் பயத்தம் மாவு சேர்த்து அரைத்துப் பூசி காய வைத்து குளித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோன்று ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு துருவல் சாறுடன் அரை டீஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.

இந்த கலவையை தினசரி காலை, மாலை இரு வேளையும் முகம் முழுவதும் நன்கு தடவவும். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்து வந்தால், சில வாரங்களிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி வித்தியாசத்தை உணர முடியும்

Related posts

அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் பொருட்கள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! சிறந்த பலனளிக்கும் 7 சரும பராமரிப்பு குறிப்புகள்

nathan

ஆண்களே உங்களுக்குதான் இந்த விஷயம்! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

பிரபலங்களின் அழகு ரகசிய குறிப்புகள்

nathan

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி?

nathan

சுவையான பாலக்கீரை கோதுமை தோசை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிளாக் ஹெட்ஸ் இயற்கை முறையில் நீக்கலாம்…

nathan