சரும பராமரிப்பு

உங்கள் பிட்டம் பிரகாசமாகவும் வசீகரமானதாகவும் இருக்க சூப்பர் டிப்ஸ்

ஒவ்வொருவரும் தான் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அழகை முன் அழகு பின் அழகு என்று பிரிப்பார்கள். முன்னழகிற்கு என்று சில வர்ணனைகள் இருக்கும். அதேபோல பின்னழகிற்கு முக்கிய வர்ணனனை பிட்டம்தான். பிட்டம் கொஞ்சம் தூக்கலாக அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். இது எளிதில் மற்ரவர்களை ஈர்க்கும். பெரும்பாலும் முக பராமரிப்பு பற்றி கவலைப்படும் நாம் பிட்ட சருமத்தை பற்றி யோசிப்பதே இல்லை. உங்கள் பிட்ட சருமத்தை பராமரித்து அவற்றை அழகாக வைத்திருக்க வேண்டும்.

இதை நாங்கள் உங்களுக்குச் சொல்வதற்கு முன், உங்கள் அந்தரங்க பாகங்கள் மற்றும் பிட்டத்தைச் சுற்றியுள்ள நிறமிகள் முற்றிலும் இயல்பானவை என்பதையும், உங்கள் சருமத்தில் நீங்கள் வசதியாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், நீங்கள் இன்னும் உங்களுக்காக அதை பிரகாசமாக்க விரும்பினால், வேறு ஒருவருக்காக அல்ல, இங்கே சில குறிப்புகள் உள்ளன. இக்கட்டுரையில், உங்கள் பிட்டத்தை பிரகாசமாக்க உதவும் குறிப்புகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளாடைகளுக்கு மாறுவதன் மூலம் உராய்வைத் தவிர்க்கவும்
உள்ளாடைகளுக்கு மாறுவதன் மூலம் உராய்வைத் தவிர்க்கவும்
நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இறுக்கமான மற்றும் தூய்மையற்ற உள்ளாடையால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நிறமி பொதுவாக உராய்வு மூலம் நிகழ்கிறது. தடையற்ற உள்ளாடைகளுக்கு மாறி, உங்கள் பிட்டங்களின் சருமம் பாதிக்காத ஜீன்ஸ் அணியுங்கள்.

ஸ்க்ரப் செய்யாமல், கிளீனரைப் பயன்படுத்தவும்

பாடி வாஷைப் பயன்படுத்தி உங்கள் கைகளால் உங்கள் பிட்டங்களின் இருபுறமும் மெதுவாக தேய்க்கவும். ஆனால் அழுத்தி வேகமாக தேய்க்க வேண்டாம். ஏனெனில் அது உராய்வை ஏற்படுத்துகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

லேசர் சிகிச்சை

உடனடி முடிவைப் பெற, உங்கள் பிட்டத்தைச் சுற்றி லேசர் வெண்மையாக்கும் சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு கவர்ச்சியான பிட்டத்தை அளிக்கும்.

செல்லுலைட் பிரச்சனை

ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் டாக்ஸின்கள், சருமத்தில் அசிங்கமான செல்லுலைட்டை உருவாக்கும். இது உங்கள் பிட்ட சருமத்தை பாதிக்கிறது. ஆதலால், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிருங்கள்.

கிரீம் அல்லது எண்ணெய் பயன்படுத்தவும்

உங்கள் பிட்ட சருமத்தை பாதுகாக்க எமோலியண்ட் கிரீம் அல்லது எண்ணெய் பயன்படுத்தவும். இது உங்கள் சருமத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கும்.

தண்ணீர் அருந்துதல்

தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆனால் ஒருவர் போதிய அளவு நீரை அருந்தாமல் இருந்தால், அது உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரித்து, சருமத்தில் செல்லுலைட்டை உண்டாக்கும். பொதுவாக தண்ணீர் போதிய அளவு அருந்தாமல் இருப்பது, உங்கள் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உங்கள் பிட்டத்தின் அழகையும் பாதிக்கும். ஆதலால், போதிய நீர் அருந்துவது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button