31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

இந்த அழகு குறிப்புகளை படுக்கச் செல்லும் முன்பாக பயன்படுத்தி பாருங்க….!

அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும். தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும். முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.

எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும். பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும். தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.

முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்றாக கலக்கி உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

பலாப்பழம் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று சதை போட்டு இளமை கூடும்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

60 வயது தாண்டிய முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்!

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

சூப்பர் டிப்ஸ்! முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்…!!

nathan

ஆண்களே உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சிவப்பான அழகைப் பெற குங்குமப்பூ

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ கூட இந்த விஷயங்களை எல்லாம் செய்துவிடாதீர்கள்!

nathan

முகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்!….

nathan