அழகு குறிப்புகள்

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே பாத வெடிப்பை போக்கலாம்

 

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே பாத வெடிப்பை போக்கலாம்

இதனால் அவர்களது கால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் இயற்கை பழத்தை பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

• பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

• மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

• கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

• வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

•  விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

• வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம். – இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் கால்கனை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Related posts

சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர்!…..

sangika

உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்….

sangika

இன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் நெயில் ஆர்ட்

nathan

சுரைக்காய் பருப்பு குழம்பு

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா?

nathan

அர்ச்சனாவின் சூட்டை கிளப்பி விடும் வீடியோ…!!

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..சுவாரஸ்யமான கட்டுரை

nathan