26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
speak
அலங்காரம்அழகு குறிப்புகள்ஆரோக்கியம்

மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா?

நமது ஆளுமைகளில் மொத்தம் 16 வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் மிகவும் அரிதான ஆளுமை என்றால் INFJ ஆகும். உலகில் மொத்தம் 2 சதவீதத்தினர் மட்டுமே இந்த ஆளுமை தகுதியின் கீழ் உள்ளார்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா? அல்லது மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள சிரமப்படுகிறீர்களா? அவ்வாறு இருந்தால் ;வாழ்த்துக்கள் நீங்கள் ரொம்ப ஸ்பெஷலானவர்கள்.

இந்த ஆளுமையின் கீழ் வருபவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள், வாழ்க்கையில் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள்.

நீங்கள் இந்த ஆளுமையின் கீழ வருகிறீர்களா என்பதை உங்களிடம் உள்ள சில குணங்களை கொண்டே கண்டறியலாம்.

இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்கள் இந்த ஸ்பெஷல் குணமுள்ளவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அதிசயமானவர்களா என்பதை உணர்த்தும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

speak

எதிர்கால உணர்வுள்ள மக்கள்

INFJ ஆளுமையில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிறிய விஷயங்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் இவர்கள் அங்கிருக்கும் பெரிய விஷயங்கள் மீதே கவனம் செலுத்துவார்கள்.

சவால்களை சந்திக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள. ” முடியாது ” என்னும் சொல் இவர்கள் அகராதியிலேயே இருக்காது, தனக்கான வெற்றி பாதையை தானே வடிவமைத்து கொள்வார்கள். அவர்கள் எப்போதும் பின்வாங்க மாட்டார்கள்.

இலக்குகளுக்கான கடின உழைப்பு

INFJ ஆளுமையாளர்கள் ஒருபோதும் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க தயங்க மாட்டார்கள்.

போட்டி நிறைந்த இந்த உலகில் எதுவும் இலவசமாக கிடைத்து விடாது என்பதை இவர்கள் நன்றாக அறிவார்கள். எனவே இலக்குகளை அடைய 100 சதவீத உழைப்பை அளிப்பார்கள்.

உள்ளுணர்வு

INFJ ஆளுமை உள்ளவர்களின் உள்ளுணர்வு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அவர்களின் உள்ளுணர்வு எப்போதுவதுதான் தவறாக செல்லும். ஆம் இவர்களின் உள்ளுணர்வு மிகவும் சரியாக இருக்கும்.

தாங்கள் செய்யும் செயல் எப்படி முடியும், எப்போது முடியும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிவார்கள்.

அது சரியாக முடியுமா, தவறாக முடியுமா என்பதை கணிக்கக்கூடியவர்கள். தன்னை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சூழ்நிலையை எப்போதும் நன்கு அறிவார்கள்.

உண்மையை தேடுபவர்கள்

INFJ ஆளுமையாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் உலகத்தில் உள்ள காஸ்மாஸ் உடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் தேடுவார்கள்.

தங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையும், மற்றவர்களின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையையும் தேடுவார்கள்.

இடைநிலையாளர்கள்

இந்த ஸ்பெஷல் ஆளுமை உள்ளவர்கள் எப்பொழுதும் பெரிய குழுக்களில் இருக்க விரும்ப மாட்டார்கள், அதற்கு பதிலாக சிறிய குழுக்களில் இருக்கவே விரும்புவார்கள் அந்த குழுவில் இருந்தே பெரிய காரியங்களை செய்ய முயலுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை காண்பது மிகவும் கடினமாகும், அதேசமயம் அவர்களை புரிந்து கொள்வதும் மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் இவர்களின் கண்ணோட்டங்கள் எப்பொழுதும் வித்தியாயசமாக இருக்கும்.

சமாதானம் செய்பவர்கள்

இந்த ஆளுமை உள்ளவர்களை மற்றவர்கள் எப்பொழுதும் சார்ந்திருக்க முயற்சிப்பார்கள், மற்றவர்களின் சோகத்தை தீர்ப்பவராக இவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள்.

மற்றவர்களின் சோகமான சூழ்நிலையில் அவர்களை தாங்கும் தோள்களாக இவர்கள் இருப்பார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்வார்கள்.

மற்றவர்களை படிப்பது

இந்த ஆளுமை உள்ளவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக மட்டுமில்லாமல் தன்னை சுற்றியிருப்பவர்களை மிகவும் நெருக்கமாக கவனிப்பதன் மூலம் அவர்களின் மனதை நன்கு இவர்கள் படித்து விடுவார்கள்.

மற்றவர்களின் மனதை படிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினையை இவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள், மேலும் தன்னை சுற்றியிருப்பவர்களில் துரோக குணம் உள்ளவர்கள் யார் என்பதையும் இவர்கள் நன்கு அறிவார்கள்.

தனிமை

INFJ ஆளுமை உள்ளவர்கள் எப்பொழுதும் தனிமையிலேயே இருப்பார்கள் ஏனெனில் இவர்களால் பலருடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள இயலாது.

ஒரு கூத்தில் இருக்கும்போது கூட இவர்கள் தனிமையிலேயே இருப்பதை நீங்கள் பார்க்கலாம், அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதும் இதுதான்.

உள்ளார்ந்த முரண்பாடுகள்

முரண்பாடுகள் என்பது இவர்களின் குணத்தில் இருக்கும் இயல்பான பகுதியாகும். இரண்டு சூழ்நிலைகளுக்கு இடையில் இவர்கள் மிகவும் விரைவாக தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்வதில் இவர்கள் கில்லாடிகள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் INFJ ஆளுமைதான்.

முடியும் அல்லது முடியாது

இவர்களை பொறுத்தவரை முடியும் அல்லது முடியாது என்ற நிலைதானே தவிர அதற்கு இடைப்பட்ட நிலை என்ற ஒன்று இல்லவேயில்லை.

ஒன்று அவர்களுடன் முழுமையாக பழகுங்கள் ஆனால் பழகாமல் இருக்காதீர்கள் இரண்டிற்கும் இடையில் இருப்பது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

மற்றவர்களுடன் பழகுவதில் இவர்கள் எப்போதும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் எழுதுவதிலும் சிறந்து விளங்குவார்கள்.

அவர்கள் பேசுவதை விட எழுதுவதில் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.

இந்த குணங்கள் உள்ளவர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் இதில் ஒன்று இருந்தாலும் நீங்கள் INFJ ஆளுமையின் கீழ் வருவீர்கள்.

Related posts

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…யோகர்ட் உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் மெருகூட்டும்.

nathan

நீங்களே பாருங்க.! 60 வயதில் 35 வயது நடிகையை மணந்த இயக்குனர் வேலு பிரபாகரன்.

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika