33.9 C
Chennai
Friday, May 23, 2025
profum
அலங்காரம்ஃபேஷன்அழகு குறிப்புகள்ஆரோக்கியம்

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகவும் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.

profum

சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது.

வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து மீரா காந்தி வாசனை திரவிய நிறுவினர் ரிட்டிகா ஜடின் அஹுஜா கூறியதாவது :

* கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்கவேண்டாம் , கடையின் ஏசி மற்றும் வாசனையின் விளைவு இருக்காது. இது உண்மையான மணத்தை சொல்லிவிடும்.

* கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வையையும் தாண்டி நிற்கும்.

* இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது ‘சிட்ரஸ்’ நறுமணங்களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சியூட்டும்..

அதிக நறுமண தொனியை விரும்பினால், சாண்ட்லவுட் (சந்தனம்) போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

*வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கிவிடும். எனவே பெர்பியூமின் உள்ளடக்கங்களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரிபார்ப்பது முக்கியம்.

* உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப்படுத்தவும், என்றார்.

பின்ன என்ன நீண்ட நேரம் பிடித்த வாசனை திரவிய மணத்துடன் உலா வாருங்கள்.

Related posts

முகத்திற்கான பயிற்சி

nathan

உண்மையை சொன்ன நயன்தாரா! சிம்பு, பிரபுதேவா செய்ததை விக்னேஷ் சிவன் செய்யவில்லை..

nathan

உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க!

nathan

மனிதத்தன்மையை இழக்கவைக்கும் இந்த மது!

sangika

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள்…

sangika

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்

nathan