26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
HAIR5
கூந்தல் பராமரிப்பு

முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள்!…

முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது. இந்த முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளது. ஆனால், சில வழிகள் மட்டுமே முடியை பாதிக்கமால் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

முடி பிரச்சினை ஒவ்வொன்றிற்கும் தனிவிதமான வைத்திய முறைகளே சரிப்பட்டு வரும். அந்த வகையில் வெள்ளை முடிகளை கருமையாக்க சில வழிகள் உள்ளது.

அதுவும் ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை கொண்டே இந்த பிரச்சினைக்கு தீர்வும் கொடுக்கலாம் என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. கூடவே முடியின் மற்ற பிரச்சினைகளுக்கும் இது தீர்வை தருகிறதாம். இனி இந்த சிறப்பான முறைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

ஆரோக்கியம்

மற்ற பழங்களை விட ஸ்ட்ராவ்பெர்ரியில் பல்வேறு நன்மைகள் உள்ளது. வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் எ, மக்னேசியம், கேரட்டின் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. இவை தான் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூடவே வெள்ளை முடிகளை தடுக்கவும் செய்கிறது.

சேதமடைந்த முடி

உங்கள் தலை முடி பல பிரச்சினைகளை சந்திக்க முக்கிய காரணமாக இருப்பது, முடி ஏற்கனவே சேதம் அடைந்து இருப்பதே. முதலில் இதை சரி செய்ய வேண்டும் அதற்கு எளிய வழி உள்ளது.

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

ஸ்ட்ராவ்பெர்ரி 3

HAIR5

தயாரிப்பு முறை

முதலில் ஸ்ட்ராவ்பெர்ரியை துண்டு துண்டாக அரிந்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கலந்து தலைக்கு தடவி 15 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்தால் முடியில் ஏற்பட்ட பாதிப்புகள் தீரும். அழுக்குகள் முடியில் உள்ள அழுக்குகளை வெளியேற்றினாலே முடி ஆரோக்கியமாக இருக்கும்.

இதற்கு தேவையானவை…

ஸ்ட்ராவ்பெர்ரி 4

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

தயரிப்பு முறை

ஸ்ட்ராவ்பெர்ரியை அரிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தடவவும். 20 நிமிடத்திற்கு பின் வெது வெதுப்பின நீரில் தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை வெள்ளை..!

வெள்ளை முடிகளை தடுக்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை…

கற்றாழை சாறு 2 ஸ்பூன்

ஸ்ட்ராவ்பெர்ரி 1

தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் கற்றாழை ஜெல்லை அரைத்து, அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பின் இவற்றுடன் ஸ்ட்ராவ்பெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும். இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் நரைகளில் இருந்து தப்பிக்கலாம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க

முடி அடர்த்தியாக வளர எளிய வழி உள்ளது.

இதற்கு தேவையான பொருட்கள் இதோ..

முட்டை 1

பழுத்த ஸ்ட்ராவ்பெர்ரி 3

தயாரிப்பு முறை

ஸ்ட்ராவ்பெர்ரியை அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 15 நிமிடம் கழித்து நீரில் தலையை அலசலாம். இந்த குறிப்பை தொடர்ந்து செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Related posts

பொடுகு தொல்லை நீங்க இதை செய்தாலே போதும்!…

sangika

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

உங்களுக்காக டிப்ஸ்.! புரதம் நிறைந்த ஹேர் பேக் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க..

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்!

sangika

முடி கொட்டும் பிரச்னையா?

nathan

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

nathan

எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

nathan

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

nathan