26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
paddu saree
அலங்காரம்ஃபேஷன்

பட்டுச்சேலை இவற்றின் காரணமாகவே விரைவில் பழுதடைந்து விடுகின்றன!…

கடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.

அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும்.

அதுதான் அசல் பட்டு. ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல் நமது முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும்.

பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது உள்ள நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைவு.

அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

paddu saree

பராமரிப்பது எப்படி?

பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.

சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது.

ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும்.

அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காயவைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும்.

சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும்.

அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.

Related posts

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

sangika

வளையல் வண்ண வளையல்!!

nathan

நிறம் என்பது வெறும் நிறமே!

nathan

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தீபாவளி பண்டிகை ஷாப்பிங்…

sangika

மெஹந்தி

nathan

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

கண்களுக்கு மேக்கப்.

nathan