ஃபேஷன்

நீளமான ஃப்ராக் – மீண்டும் வந்ததுள்ள இன்றைய ஃபேஷன்

நீளமான அங்கி அணிந்தது போன்ற ஆடைகள் மேக்சி என்றும், மேக்சி ஸ்கர்ட் என்றும் லாங் கௌன் என்றும், அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்தது. கிட்டத்தட்ட 20 முதல் 30 வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்த ஆடைகள் சிற்சில மாற்றங்களுடன் வந்துள்ளது. லாங் ஃப்ராக் என்று அழைக்கப்படும் இது கழுத்தில் தொடங்கி குதிகால் வரை நீண்டு தரையிலும் லேசாக புரள்கிறது.

நீண்ட கைகளும் கொண்ட இந்த ஃப்ராக்கை அணிந்து வரும்போது கனவுக்காட்சியில் வரும் தேவதைகள் போல தோன்றுகிறார்கள் பெண்கள். இந்த ஃப்ராக்குகள் கழுத்திலிருந்து இடுப்பு வரை அடர்த்தியான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது. இந்த ப்ராக்குகளில் மற்றொரு வகை பேண்ட் ஸ்டைல் சல்வார் கமிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இது மேலே அணியும் பகுதி கழுத்திலிருந்து இடுப்பு வரை சுடிதார் போல் வந்து இடுப்பிலிருந்து பக்கவாட்டில் ஸ்லிட் வைத்து கணுக்கால் வரை நீள்கிறது. மேலே அணியும் இந்த சல்வார் ஸ்லிட் இருப்பதால் ஒரு புறமாகவோ, நடுவிலோ நடக்கும் போது ஒதுங்கி விடுவதால், காலில் அணியும் பேண்ட் வெயியே தெரிகிறது. எனவே இந்த பேண்ட்களில் நிறைய எம்ப்ராய்டரி மற்றும் பிரிண்ட் வேலைப்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் மேலே அணியும் ஆடை விலகும்போது தெரியும்.

பேண்ட் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. இதிலேயே சில மாடல்களின் மேலே உள்ள நீளமான டாப் இருபுறமும் ஸ்லிட் இல்லாமல் நடுவில் வயிற்றில் இருந்து கால்கள் வரையில் நீளமான ஸ்லிட் வைத்து தைக்கப்படுகிறது. இதிலும் நடக்கும் போது ஸ்லிட்டின் இடையே பேண்ட் தெரிவதால் பேண்ட் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள் அழகாக வடிவமைக்கப்படுகின்றன. இந்த பேண்ட் சல்வார் கமீஸ் மாடலிங் கை இல்லாமலும் (ஸ்லீவ் லெஸ்) நீண்ட கைகளுடன் மற்றும் துப்பட்டா இல்லாமலும துப்பட்டாவுடன் அணிந்து கொள்ளலாம்.
b76a8afa 3028 4c25 9d73 33110a22f5ee S secvpf
இந்த ஆடையை பொருத்தவரை பார்க்க மாடர்னாக தெரிந்தாலும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றக் கூடியதாகவும், கண்ணியமாகவும் இருக்கிறது. உடல் முழுவதையும் மறைத்து இருப்பதுடன் பார்க்க கம்பீரமாகவும் தெரிகிறது. போன வருடங்களில் அதிகமாக பெண்கள் விரும்பி அணிந்த ஜபாங் மாடல் ஆடையை தொடர்ந்து இந்த வருடம் வந்திருக்கும் இந்த ஆடையும் பெண்களை பெரிதும் கவரும் என்றே நம்பலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button