orange
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

ஆரஞ்சு சாறை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ”ப்ளிச்” ஆகிவிடும்.

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷ’யல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.

தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

orange

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

Related posts

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

சூப்பர் டிப்ஸ்! உடலை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்யலாம்?.!

nathan

பழங்கள் தரும் பளிச்சிடும் நிறம்!

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

சருமம் காக்கும் கற்றாழை

nathan

உங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்!…

nathan

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்ள!…

nathan

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

வயதான தோற்றத்தை உண்டாக்கும் அழகுக் கீரிம்கள்!…..

nathan