மகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும்.
மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.
திரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.
ஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும்.
திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர் அவராய் இருக்கட்டும்
திரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விடவேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது.
ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.
அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள்.
இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.
தவறான நட்புகள்
திரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது.
தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.
மரியாதை
ஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
சோம்பறித்தனம் கூடாது
வேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.
அதிகமாக வெளியே இருக்கக்கூடாது
ஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
ஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.