beauty
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

காலையில் எழுந்து கொள்வதற்கே பலருக்கும் மிக அலுப்பாக இருக்கும். இப்படி பட்ட நம்மை காலையில் எழுந்ததும் இதை செய், அதை செய் என்று சொன்னால் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள். ஆனால், உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற கூடிய ஒரு சிலவற்றை செய்வதில் எந்த தவறும் இல்லை.

காலை மற்றும் மாலையில் நாம் ஒரு சில செயல்களை தொடர்ந்து செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

நமது சருமத்தை கரும்புள்ளிகள், பருக்கள், முக வறட்சி, எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சினைகளில் இருந்து இவை காக்கும்.

தினமும் காலை மற்றும் மாலையில் இந்த பதவில் கூறும் 7 டிப்ஸ்களை செய்து வந்தால் எப்படிப்பட்ட சரும மாற்றங்கள் உண்டாகும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

எழுந்ததும்…

காலையில் எழுந்த உடன் முகத்தை நீரில் கழுவ வேண்டும். நேரம் இருந்தால் 1 ஸ்பூன் காபி பொடி மற்றும் அரை ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் சென்று முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளி வரும்.

beauty

குளிப்பதற்கு

சிலர் குளிப்பதற்கு நேரமில்லாமல் இதை மறந்தே விடுவர். இவர்களை தவிர்த்து மற்றவர்கள், சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தி குளித்து வந்தால் தோல் பொலிவு பெறும். கூடவே தோலில் உள்ள இறந்த செல்களை இது வெளியேற்றியும் விடும்.

ஈரப்பதம்

சருமம் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு தான் அழகு பொருட்களை பயன்படுத்தினாலும் முக அழகு மோசமாக தான் இருக்கும்.

ஆதலால், எப்போதுமே முகத்தை வறட்சியாக இல்லாமல் ஈரப்பதமாகவே வைத்து கொள்ளுங்கள்.

மேக்கப்

முகத்தில் மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால், எப்போதுமே வேதி தன்மை குறைந்த இயற்கை பொருட்களான மேக்கப் பொருட்களை பயன்படுத்தி மேக்கப் போட்டால் நல்லது. இல்லையெனில் முகத்தின் அழகை பாழாக்கி விடும்.

உணவு

முக அழகாக இருக்க முகத்தில் சில வகை குறிப்புகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது. மாறாக சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பாக காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இது உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக செயல்படும்.

முகம் கழுவுதல்

எப்போதுமே வெளியில் போய்விட்டு வந்தால், வெளியில் உள்ள தூசுகள், அழுக்குகள், மேலும் சில நச்சுக்கள் ஒட்டி கொள்ளும். இதை போக்குவதற்கு எப்போதுமே 1 நிமிடம் முழுமையாக முகத்தை கழுவுவது நல்லது.

இவ்வாறு செய்து வந்தால் உங்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

தவிர்க்க!

எப்போதுமே இரவு நேரத்தில் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட கூடாது. இது உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு முகத்தின் அழகையும் கெடுக்கும்.

ஆதலால், எப்போதுமே இரவு நேரத்தில் சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

 

Related posts

முகத்தில் தழும்புகளா?

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

nathan

முகத்தின் அழகை இயற்கையான முறையில் மெருகூட்டுவது எப்படி.!!

nathan

முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் அற்புத மாஸ்க்…

nathan

அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

sangika

உக்ரைன் பொதுமக்களிடம் தனியாக வந்து சிக்கிய ரஷ்ய வீரருக்கு நேர்ந்த நிலை

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan