ஒவ்வொரு எண்ணெய் வகைகளுக்கும் ஒரு தனி தன்மை உண்டு. ஒரு சில எண்ணெய் வகைகளை நாம் உணவில் மட்டுமே பயன்படுத்த முடியும், சில எண்ணெய் வகைகளை முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், ஒரு சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. அந்த வகையில் நமது உடலுக்கும் முகத்திற்கும் ஆரோக்கியம் தர கூடிய ஒரு எண்ணெய் தான் இந்த ஆலிவ் எண்ணெய்.
இது சமையலுக்கும், முக அழகிற்கும் நம்மால் பயன்படுத்த இயலும். பல்வேறு நன்மைகள் இந்த எண்ணெய்யில் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. புற்றுநோய் முதல் இதய நோய் வரை தடுக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அதே போன்று முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் இந்த ஆலிவ் எண்ணெய் சரியான தீர்வை தரும்.
குறிப்பாக நமது அழகை கெடுக்கும் அளவிற்கு பருக்களின் தழும்புகள் அப்படியே இருக்கும். அதனை சரி செய்ய கூடிய தன்மை இந்த ஆலிவ் எண்ணெய்யில் உள்ளது. இந்த எண்ணெய்யை ஒரு சில பொருளோடு சேர்த்து எப்படி பயன்படுத்தி பருக்களின் வடுவை போக்க செய்வது என்பதை இனி அறிந்து கொள்வோம்.
வரலாறு என்ன சொல்கிறது..?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்தே இந்த ஆலிவ் எண்ணெய்யை நமது முக அழகிற்கும் சரும பராமரிப்பிற்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ராஜா ராணி காலத்தில் இதை ஒரு மதிப்பிக்க எண்ணெய்யாகவே கருத்துவார்களாம். இவ்வளவு பெருமைக்கும் இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது தான் காரணம்.
குறிப்பு #1
முகத்தில் இருக்க கூடிய பருக்களின் தழும்பை போக்குவதற்கு இனி காசு கொடுத்த எந்த வித கிரீம்களையும் நீங்கள் வாங்க வேண்டியதில்லை. மாறாக இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும். இதற்கு தேவையான பொருட்கள்…
தேன் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை…
தேனையும் ஆலிவ் எண்ணெய்யையும் நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தடவவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு #2
தழும்பை முழுவதுமாக போக்குவதற்கு 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்து வந்தால் பருக்களின் தழும்புகளை முழுவதுமாக நீக்கி விடலாம்.
குறிப்பு #3
மிக விரைவிலே முறையில் உங்களின் முகத்தில் உள்ள பருக்களினால் ஏற்பட்ட தழும்புகளை போக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு போதும்.
தேவையானவை..
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
தேன் 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்
தயாரிப்பு முறை…
முதலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து கொண்டு முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில் பூசலாம். 15 நிமிடம் கழித்து முகத்தை மிதமான சுடு நீரில் கழுவலாம். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் தழும்புகள் மறைந்து போகும்.
குறிப்பு #4
முகத்தில் இருக்கும் தழும்பை போக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது. 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் கழுவலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு #5
முகத்தை அழகாக மீண்டும் மாற்ற கூடிய தன்மை இந்த மஞ்சள் மற்றும் ஆலிவ் கலவையில் உள்ளது. தினமும் அரை ஸ்பூன் மஞ்சளில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவி வந்தால் பருக்களின் தழும்புகள் மறைந்து போகும்.
குறிப்பு #6
1 ஸ்பூன் பிரவுன் சுகர் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த எளிமையான குறிப்பு உங்களின் இழந்த முக அழகை மீண்டும் பெற்று தரும்.