25.1 C
Chennai
Thursday, Dec 4, 2025
beautygirl
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

சூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கமான ஒன்று.

ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.

beautygirl

பால் – ஒரு டீஸ்பூன் ,
மஞ்சள் பொடி – ௨ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு தேவையான அளவு. இவை மூன்றையும் ஒன்றாக கலந்துகொண்டு முகத்தில் குறைந்தது 15 நிமிடம் ஃபேஸ் பேக் போடவும். வாரத்தில் 3 முறை இதுபோன்று செய்துவந்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அடுத்ததாக பப்பாளியைக் கொண்டு எப்படி நம்ம முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்றுவது என்பதை பார்க்கலாம்.

கொஞ்சம் பப்பாளி சாறு, கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கொஞ்சம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.

பொதுவாகவே சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் கற்றாழையை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றலாம்.

அதேபோன்று உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மையும் குறைந்துவிடும். வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Related posts

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

சருமத்தின் ஈரப்பதத்தை காக்கும் ஃபேஸ் பேக்குகள்

nathan

சரும பிரச்சனைகளை சரிசெய்யணுமா? இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

பல் வலியை போக்கும் வெங்காயம் எப்படி என்று தெரியனுமா? அப்ப உடனே இத படிங்க…

sangika

ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்ப்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

sangika

முகத்தில் வளரும் தேவையற்ற முடி..நீக்குவது எப்படி?

nathan

முகத் தழும்புகளை நீக்க முத்தான 9 இயற்கை வழிகள்!!!

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

sangika