27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
pine apple
அழகு குறிப்புகள்

ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர ஹெர்பல் ஜூஸ்!..

ஆஸ்துமா சுவாசக் குழாயில் உண்டாகும் அலர்ஜியினால் உண்டாகும் நாள்பட்ட வியாதி. பரிபூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் முற்றிலும் வரவிடாமல்தடுக்கலாம்.

அதாவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, அலர்ஜியை உண்டாக்காதவாறு செய்யலாம்.

இது பொதுவாக குளிர்காலத்தில் கிருமிகளின் தாக்கத்தினாலும், தூசு, புகை நிறைந்த இடங்களிலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதனால் சரிவர தூக்கமில்லாத அப்னியா நோயினால் அவதிப்படுவார்கள். இரவுகளில் தூக்கம் இல்லாத போது அதிகப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர ஒரு ஜூஸ் உள்ளது. தினமும் குடித்தால் உங்களுக்கு ஆஸ்துமா என்பதை மறந்துவிடுவீர்கள் அதனைப் பற்றி இங்கு காண்போம்.

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

தேவையானவை :

எலுமிச்சை – 1
அன்னாசி – 2 துண்டுகள் சிறியது
வெள்ளரி – 2 துண்டுகள்
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் – 1 சிட்டிகை
மிளகுப் பொடி – அரை ஸ்பூன்

pine apple

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

அன்னாசி , வெள்ளரி இஞ்சியை அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து எலுமிச்சை சாறு, மஞ்சள் மிளகுப் பொடி ஆகியவை கலக்கவும்.

பருகும் முறை :

இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் பருக வேண்டும். முக்கியமாக உடனுக்குடன் புதிதாக தயாரித்து குடிக்கவேண்டும். வைத்து குடிக்கக் கூடாது.

மற்றொரு தயாரிக்கும் முறை :

250 மி.லி நீரில் எலுமிச்சை தோல், அன்னாசி, வெள்ளரி, தோல் நீக்கிய இஞ்சி துண்டு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து நன்றாக கொதிக்கவிடுங்கள்.

நீர் ஒரு மடங்கு சுண்டியதும் அதனை வடிகட்டி அதில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதும் நல்லது.

விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. நோய் எதிர்ப்பு மணடலத்தை பலப்படுத்தும். கிருமிகளை எதிர்த்து போராடும்.

Related posts

முகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்!…

nathan

உங்கள் முகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!!

nathan

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

மிகச் சிறந்த நம்பகமான தீர்வு… முகத்தில் முடி வளர்ச்சியா?

nathan

சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

அக்குள் கருமையை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் ஓட்ஸ் ஸ்கரப் பேஸ்ட்

nathan

இதை நீங்களே பாருங்க.! ப்ரியா அட்லியும் பேபியும்: புகைப்படம்!

nathan