36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
அழகு குறிப்புகள்

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

பொதுவாகவே ஆண்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதால் முகம் மிக சீக்கிரமாகவே பொலிவை இழந்து கருமை அடைந்து விடுகிறது.

இதனை சரி செய்ய விளம்பரங்களில்போடும் கண்ட கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி கொள்கின்றனர்.

இந்த கிரீம்கள் முகத்தின் அழகை மேலும் கெடுக்கிறதே தவிர அழகையும் பொலிவையும் தருவதில்லை.

இந்த நிலையில் உங்களுக்கு உதவ பலவித இயற்கை முறையிலான குறிப்புகள் இருக்கின்றன.

இந்த பதிவில் ஆண்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் மாற்ற கூடிய நச்சுனு 6 டிப்ஸ் கூறப்பட உள்ளது.

இதை நீங்களும் ட்ரை செய்து இதன் பயனை அடையுங்கள் நண்பர்களே…

சரும பிரச்சினைகள்

நாம் சாப்பிட கூடிய உணவு பொருட்கள் முதல் அன்றாட பழக்கங்கள் வரை நமது முகத்தை கெடுக்கிறது.

இதனால் பருக்கள், முக வறட்சி, கருமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறது.

இது ஒவ்வொருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப மாறுபடும்.

சிறந்த முறை

முகத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளையும் இந்த டிப்ஸ் தீர்க்கவல்லது.

இதற்கு தேவையானவை…

1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை…

முதலில் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடாவை நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவு பெறும். இதனை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வரலாம்.

பப்பாளி முறை

முகம் எப்போதும் மினுமினுன்னு மின்னவும், அதிக காலம் பொலிவாகவும் இருக்க இந்த குறிப்பு உதவும்.

தேவையானவை…

பப்பாளி சாறு 2 ஸ்பூன்

பால் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

பப்பாளியை அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் முகம் தங்கம் போல மின்ன செய்யும்.

கருமையை நீக்க

முகத்தை பளபளக்க செய்ய முதலில் கருமையை நீக்க வேண்டும். அதற்கு இந்த டிப்ஸ் உதவும்.

இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

ஆப்பிள் சாறு 1 ஸ்பூன்

வெள்ளரிக்காய் சாறு 1 ஸ்பூன்

செய்முறை…

முதலில் இந்த மூன்று பழத்தின் சாறுகளையும் தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.

அடுத்து இவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்யவும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு போதுமே..!

முகத்தை பளபளவென வைத்து கொள்ள ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் உருளை கிழங்கு டிப்ஸ்.

அதாவது, உருளை கிழங்கை அப்படியே அரிந்து, முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவாக மாறும்.

மேலும் முகத்தில் எந்தவித தொற்றுகளும் அண்டாது.

எலுமிச்சையும் பாதாமும்..

உங்கள் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும்.

இந்த டிப்ஸை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

நீங்க எளிய வழிகள்! முகப்பரு மற்றும் தழும்புகள்..

nathan

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய்

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

லெஜெண்ட் சரவணனின் பெரிய மனசு! 24/7 நடக்கும் அன்ன தானம்..

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

nathan

கிறீன் டீ பேஸ் மாஸ்க்…

sangika

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika