1 1
அழகு குறிப்புகள்

சுவையான தக்காளி பிரியாணி!…

தேவையானப்பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 கப்,
தக்காளிக்காய், தக்காளிப்பழம், பச்சை மிளகாய் – தலா 2 (நறுக்கவும்),
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
பெரிய வெங்காயம் – ஒன்று,
பிரெட் ஸ்லைஸ் – 2,
முந்திரித் துண்டுகள் – 4,
சீரகம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – 3 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

1 1

செய்முறை:

வெந்நீரில் தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து… தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை துண்டுகளாக்கி வறுக்கவும். குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

Related posts

கே.ஜி.எப் ஹீரோ யாஷின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா..

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகப்பொலிவை இழந்த பிக்பாஸ் ஜூலி.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika

உங்க பற்களில் உள்ள மஞ்சள் கறை போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் புடின்! நீங்களே பாருங்க.!

nathan

அரபிக் குத்து பாடகியா இது.. நீங்களே பாருங்க.!

nathan

Tamil Beauty Tips ,அழகுக் குறிப்புகள்,தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா

nathan

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika