30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
kidney stone
மருத்துவ குறிப்புஆரோக்கியம்

சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள்…

வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளது. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான்.

பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும். இந்த வயதினருக்கு டெஸ்டோஸ்பீரான் சுரப்பு அதிகமாக இருக்கும்.

எனவெ இந்த வயதுடைய ஆண்களுக்கு சிறுநீரகங்களில கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

kidney stone

சிறுநீரக கற்களால் ஏற்படுத்தும் வலி தாங்க முடியாத அளவுக்கு வலி உள்ளதாக இருக்கும். ஆனால், சிறுநீரக கற்களை நீக்க அல்லது வெளியேற்ற, சரிசெய்ய நவீன சிகிச்சைகள் உள்ளன.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம்.

எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவுக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக கடுமையான வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு கடுமையான எரிச்சல் மற்று வலி இருக்கும். சில சமயங்களில் ரத்தம் கலந்து வரலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாகவும், எக்ஸ்ரே மூலமாகவும் உறுதிபடுத்தலாம். பொதுவாக சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மி.கிராம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும்.

எனவே, சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.

பொதுவாக 90 சதவீத கற்கள் சிறுநீர் வழியாக தானாகவே வெளியேறிவிடும். 6 மில்லி மீட்டர் தடிமனுக்கு அதிகமான பெரிய கற்கள் தான்வெளியேறாது.

அத்தகைய கற்களை அதிர்வலை மூலமாக சிறு சிறு துகள்களாக உடைத்து வெளியேற்றிவிடலாம். இதில் வெளியேறாவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை போன்ற முறைகளின் மூலம் வெளியேற்ற வேண்டும்.

Related posts

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள் ?

nathan

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

nathan

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்

nathan

சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க

nathan

சமையல் குறிப்பு டிப்ஸ்

nathan

ஓடும்போது இவ்வாறான ஆடைகளை அணியவே கூடாதாம்!…

sangika

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்

nathan

சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்!..தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் வெளியே சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று..!

nathan