கர்ப்ப காலத்தின் பின்பு உடலில் தளும்புகள் ஏற்படும் என்பது பழைய நம்பிக்கை. தளும்புகள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் அடிக்கடி ஏற்படும் உடல் எடை மாற்றங்களுமே.
தளும்புகள் ஏற்பட்டு விட்டால் அதனை போக்குவதற்கு பல விலை மதிப்பற்ற பொருட்களை பயன்படுத்தினாலும் அவை போதியளவு தீர்வை தருவதில்லை. அத்துடன் பணமும் விரயாமாகி விடுகிறது. ஆனால் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யும் சில வீட்டு வைத்திய முறைகள் முழுமையான தீர்வைப் பெற்றுத் தருகின்றது.
ஏன் ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்?
ஆமணக்கு எண்ணெய்யில் காணப்படும் மருத்துவ குணங்களால் இதனை சரும சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிற்கு தீர்வாக பயன்படுத்துகின்றனர். இதில் காணப்படும் இயற்கையான கொழுப்பமிலமான ரிசினோலிக் அமிலம் மற்றும் ட்ரை கிளிசரைட் சருமத்தின் ஆழம் வரை சென்று தீர்வைப் பெற்றுத் தரும்.
• இதில் உள்ள கொழுப்பமிலம் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைப் பெற்றுத் தரும்.
• இது சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்திருக்க உதவும்.
• கொலாஜன் உருவாக்கத்தை அதிகரித்து தளும்புகளை மறையச் செய்யும்.
• இது பக்டீரியா, பங்கள் தொற்றுக்களில் இருந்து சிறாந்த தீர்வைப் பெற்றுத் தரும்.
• இதி வீக்கம் மற்றும் பல தொற்றுக்களை இலகுவாக குணப்படுத்தும்.
•
ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்துவது எப்படி?
1. ஆமணக்கு எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும்:
சம் அளவு ஆமணக்கு எண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊறிய பின்பு நீரினால் கழுவவும்.
இதனை வாரத்திற்கு 3 தடவைகளாவது செய்யலாம்.
2. ஆமணக்கு எண்ணெய்யும் உருளைக் கிழங்கு:
ஒரு உருளைக்கிழங்குச் சாற்றை எடுத்து 2 மேசைக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். அதனை தளும்புகல் மீது தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கலில் நீரினால் கழுவவும்.
வாரத்திற்கு 3 அல்லது 4 தடவைகள் செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.
3. ஆமணக்கு எண்ணெய்யுடன் பிளாஸ்டிக் சுற்று:
சூடாக்கப்பட்ட எண்ணெய்யினை சருமத்தில் தடவி விரல்களால் மசாஜ் செய்து கொள்ளவும். அதனை பிளாஸ்டிக் பையினால் சுற்றிக் கட்டவும். அதன் மீது சூடான நீர்ப்பையை வைத்து தேய்க்கவும். பின்பு நீரினால் காலைக் கழுவவும்.
இதனை வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் செய்வது சிறந்தது.
4. ஆமணக்கு எண்ணெய்யும் கராம்பும்:
சிறிதளவு கராம்பை அரைத்து எடுத்து ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். இதனை சூடாக்கி தளும்புகள் மீது தடவவும். 15 அல்லது 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
இதனை தினமும் செய்வதனால் சிறந்த தீர்வைப் பெற முடியும்.
5. ஆமணக்கு எண்ணெய்யும் கற்றாளையும்:
உடன் எடுக்கப்பட்ட கற்றாளை சாற்றை ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கலவையாக எடுத்துக் கொள்ளவும். அதனை சிறிதளவு சூடாக்கி இரவு தூங்குவதற்கு முன்பாக பூசி மறுநாள் காலையில் நீரினால் கழுவவும்.
இதனை தினமும் செய்வதனால் தளும்புகள் முற்றாக நீங்கும்.
6. ஆமணக்கு எண்ணெய்யும் சீனியும்:
சம அளவு சீன்இயும் ஆமணக்கு எண்ணெய்யும் எடுத்து கலவையாக தயாரித்துக் கொள்ளவும். இதனை தளும்புகள் மீது 5 நிமிடங்கள் ஸ்கிறப் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் செய்வதனால் தீர்வைப் பெற முடியும்.
7. ஆமணக்கு எண்ணெய்யும் ஓட்ஸும்:
1 மேசைக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், ஒரு மேசைக்கரண்டி ஓட்ஸ், 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்து கலவையாக தயாரித்து கொள்ளவும். இதனை தளும்புகள் மீது 5 நிமிடங்கள் ஸ்கிறப் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
இதனை தொடர்ச்சியாக செய்வதனால் சிறந்த தீர்வைப் பெறலாம்.
முக்கிய குறிப்புகள் சில:
• சுத்தமான கலப்படமற்ற ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவதே சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும்.
• குறிப்பிட்ட கால இடை வெளியில் தொடர்ச்சியாக இந்த சிகிச்சைகளை எடுத்து கொள்வது அவசியமானது.
• சரும வெடிப்புக்கள், வெட்டுக்கள் மீது ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிகளவான நீரை அருந்துவதன் மூலம் உடலின் ஈரப்பதத்தைப் பேண வேண்டும்.