27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
boy hair
அழகு குறிப்புகள்ஆண்களுக்குகூந்தல் பராமரிப்புதலைமுடி அலங்காரம்

இயற்கை வழி முறைகளை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் இத படிங்க!

அழகு என்பது முகத்தில் கிரீம்களை பூசி கொண்டும், கலர் கலர் டைகளை தலையில் அடித்து கொள்வது மட்டும் கிடையாது. அழகு என்பதே இயற்கையாக இருப்பது தான். இயற்கையை நாம் செயற்கை தன்மையுடன் காட்ட முடியும். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு தனி தன்மை எப்போதும் இருக்கும்.

இயற்கையை என்றுமே செயற்கை முந்த முடியாது. அந்த வகையில் ஆண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் கண்ட செயற்கை வேதி பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை வழி முறைகளை பயன்படுத்தலாம். எப்படி அவற்றை பயன்படுத்தலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

என்ன பிரச்சினை..? பெண்களுக்கு இருப்பது போன்றே ஆண்களுக்கும் அழகை பற்றிய ஆசை எப்போதும் இருக்க தான் செய்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காட்டி கொள்கின்றனர். சிலர் இந்த ஆசையை மறைத்து வைக்கின்றனர். முடி உதிர்வு பல ஆண்களுக்கிடையே உள்ள மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, வழுக்கை, தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகள் தான் ஆண்கள் அதிகம் சந்திப்பது.

boy hair

இளநரையை போக்க ஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த நரை முடிகளை போக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் உள்ளது. அதற்கு தேவையானவை… செம்பருத்தி பூ 4 நல்லெண்ணெய் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :- செம்பருத்தி இதழை மட்டும் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இளநரைகள் மறைந்து முடி கருமையாக இருக்கும்

வெங்காய முறை முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒரு எளிய வழி இருக்கிறது. நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்ய முடியும். தேவையானவை :- தேன் 1 ஸ்பூன் வெங்காயம் பாதி

செய்முறை :- வெங்காயத்தை அரிந்து கொண்டு அதனை நன்கு அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து தலைக்கு தடவவும். தேவைக்கு வேண்டுமென்றால் சிறிது யோகர்ட் சேர்த்து கொள்ளலாம். 30 நிமிடம் கழித்து கிகைக்காய் பயன்படுத்தி தலையை வெது வெதுப்பான நீரில் அலசவும். இவ்வாறு செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி நன்கு வளர முடி உதிராமல் நன்றாக வளர ஒரு அற்புத குறிப்பு உள்ளது. இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம். தேவையானவை :- முட்டை வெள்ளை கரு 1 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் தயிர் 1 ஸ்பூன் மருதாணி பொடி 2 ஸ்பூன் டீ டிகாஷன் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தயிர், டிகாஷன், மருதாணி பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இதனை ஊற விட்டு, மறுநாள் இதனை தலைக்கு தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சினைக்கு முற்று தரும்.

உருளை கிழங்கு சாறு முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வைத்து கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது. 1 உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதனை நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றை தலைக்கு தேய்த்து வரவும். இதில் உள்ள விட்டமின் அ, பி, சி போன்றவை முடியை நன்றாக வளர செய்யும்.

ஆலிவ் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின்களும், தாது பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு 2 முறை ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தடவி 10 நிமிடம் மசாஜ் கொடுத்து தலைக்கு குளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

Related posts

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பால் நேர்ந்த விபரீதம்

nathan

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்க….

sangika

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan