30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
ஆரோக்கியம்உடல் பயிற்சி

தோள்பட்டை, கைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

தோள்பட்டை, கைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

ஃபிட்டாக இருக்க ஜிம் செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே ஒவ்வொரு பகுதிக்கான எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் ஃபிட்டான உடல் அமைப்பைப் பெற முடியும்.உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்துவிட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். முழு உடலுக்கான பயிற்சியின் முதல் பகுதியாக, மேல் பாகத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதைச் செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சிகளை செய்வதற்கு முன்பு, வார்ம்அப் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முடித்த பிறகு, கூல்டவுன் பயிற்சிகள் செய்ய வேண்டும். பயிற்சி முறைகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகள் செய்வது நல்லது.

மாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups) :

தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பாதங்களை சற்று  தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை இறக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 15 முறை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம். பெண்கள் ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. ஆனால் அவர்களால் முடிந்த அளவில் செய்யலாம். இந்த பயிற்சியை செய்வதால் நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.

Related posts

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்

nathan

டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்

nathan

எளிய பயிற்சிகள்… நிறைய நன்மைகள்

nathan

இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்

nathan

கர்ப்ப கால நீரிழிவு

nathan

ஃபிட்டான தொடைக்கு எளிய 3 பயிற்சிகள்

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika