27.1 C
Chennai
Saturday, May 24, 2025
752x395 nar kabugu faydalari nelerdir ve neye iyi gelir 1525170456628
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மகத்துவம் பெற்ற மாதுளை..!

முகத்தை வெண்மையாக மாற்ற பல வழிகள் இருந்தாலும் இயற்கை முறையே மிக சரியான முறையாக பலராலும் கருதப்படுகிறது. முகத்தை வெண்மையாக மாற்ற நாம் சாப்பிட கூடிய பழங்களே போதும்.

அதில் குறிப்பாக மாதுளை பழத்தை வைத்தே முக பருக்கள் முதல் முக கருமை வரை அனைத்து பிரச்சினையையும் தீர்த்து விடலாம். மாதுளை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவிற்கு முகத்தின் அழகிற்கும் இது நல்லது. வாங்க, எப்படி பயன்படுத்தணும்னு பார்ப்போம்.

மகத்துவம் பெற்ற மாதுளை..! மாதுளையில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதய நோய்கள், மாதவிடாய் பிரச்சினை, ரத்த சோகை போன்ற எண்ணற்ற பிரச்சினைக்கு அருமையான தீர்வை இது தரும். இதனை நாம் சாப்பிட்டாலும் முகத்தில் பூசினாலும் அருமையான பலனை தரும்.

752x395 nar kabugu faydalari nelerdir ve neye iyi gelir 1525170456628

மாதுளையின் சத்துக்கள்… இந்த செக்க செவந்த பழமான மாதுளையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைதான் முகத்தை அழகாக மாற்றுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இதோ… கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் வைட்டமின் சி வைட்டமின் கே பொட்டாசியம் சோடியம்

பருக்களை ஒழிக்க முகத்தில் உள்ள பருக்களை முற்றிலுமாக அழிக்க இந்த குறிப்பு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே போதும். தேவையானவை :- யோகர்ட் 1 ஸ்பூன் கிரீன் டீ 1 ஸ்பூன் மாதுளை 1 ஸ்பூன் ‘ தேன் 1 ஸ்பூன்

செய்முறை :- மேற்சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு, ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் பருக்கள் விரைவிலே மறைந்து விடும்.

வெண்மையான முகத்திற்கு முகத்தை வெண்மையாக மாற்ற இந்த முக பூச்சு எளிமையாக உதவும். இதற்கு தேவையானவை… மாதுளை 3 ஸ்பூன் யோகர்ட் 2 ஸ்பூன் ஓட்ஸ் 3 ஸ்பூன் தேன் 3 ஸ்பூன்

செய்முறை :- முதலில் ஓட்ஸை மாதுளையுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையுடன் தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு முகத்தில் பூசி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பு உங்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெண்மை பெற செய்யும்.

இளமையான முகத்திற்கு முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள இந்த மாதுளை குறிப்பு ஒன்றே போதும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். தேவையானவை :- மாதுளை 3 ஸ்பூன் பப்பாளி 2 துண்டு

செய்முறை :- முதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து, மாதுளை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இவை இரண்டையும் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

பொலிவான முகத்திற்கு முகம் மினுமினுவென மின்ன வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு மிகவும் உதவும். தேவையானவை :- மாதுளை தோலின் பொடி 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் பன்னீர் 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் மாதுளையின் தோலை நன்கு உலர வைத்து கொண்டு, பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முகம் மினுமினுப்பாகும்.

Related posts

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

கண்ணை சுற்றிய கருவளையமே ஓடிப்போ!

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

அவசியம் தெரிஞ்சுகோங்க!!முகத்தை வசீகரமாக்கும் அழகு தெரபி

nathan

உங்களுக்கு பரு உடைந்து புண்ணாகாமல் அப்படியே அமுங்கணும்மா?

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

நம்ப முடியலையே… மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை மீன்..

nathan

தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்

nathan

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan