24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Can you eat when you go for childbirth
மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க.. நீங்கள் பிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா?

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு இருக்கும். இதற்கான விடையை இப்போது அறிந்து கொள்ளலாம்.

பிரசவத்திற்கு செல்லும் போது சாப்பிட்டு விட்டுச் செல்லலாமா?
‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

Can you eat when you go for childbirth

Related posts

நாளைய வெற்றியை உறுதிபடுத்த நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

nathan

அலுவலகம் செல்லும் பெண்களுக்கான தாய்ப்பால் சேமிப்பு வழிமுறைகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எளிய ஆயுர்வேத குறிப்புகள்!

nathan

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான விஷயங்கள்

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

nathan

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

அவசியம் படிக்க..ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்…!

nathan

இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லையா?

nathan

கற்பக தருவான கல்யாண முருங்கை

nathan