26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
swollen gums
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில பழங்கால வழிகள்!

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் அவசியமானது. வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அல்லது வாயில் ஏதேனும் தொற்றுக்களோ, காயங்களோ இருந்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் உண்ணும் உணவுகளின் வழியே கிருமிகள் உடலினுள் சென்று, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மோசமாக்கிவிடும். முக்கியமாக ஈறுகளில் காயங்கள் இருந்தால் மற்றும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவித்தால், சற்றும் தாமத்திக்காமல் உடனே பல் மருத்துவரை அணுகுங்கள்.

ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே சிகிச்சை அளித்து தீர்வு காண முடியும். ஆனால் நிலைமை மோசமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே நல்லது. பல வருடங்களாக மக்கள் ஈறுகளில் உள்ள பிரச்சனைகளுக்கு ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டு வருகிறார்கள். இந்த கட்டுரையில் ஈறுகளில் உள்ள காயங்கள் அல்லது புண்ணை சரிசெய்ய உதவும் சில பழங்கால இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அந்த வழிகளை ஒருவர் பின்பற்றி வந்தால், நிச்சயம் ஈறுகளில் உள்ள புண் மற்றும் இதர ஈறு பிரச்சனையில் இருந்து முற்றிலும் விரைவில் விடுபடலாம்

வெதுவெதுப்பான உப்பு நீர் வெதுவெதுப்பான உப்பு நீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்து வந்தால், ஈறுகள் மற்றும் தொண்டையில் உள்ள வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உப்பு நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கும் போது, சில மணிநேரம் வலி ஏற்படாமல் இருக்கும். இந்நிலையில் சில மணிநேரம் கழித்து மீண்டும் உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, வாயில் அந்நீரை ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்துக் கொண்டு இருங்கள். பின் வாயில் உள்ள உப்பு நீரை வெளியேற்றிவிட்டு, சுத்தமான நீரால் வாயைக் கழுவுங்கள்.

நேச்சுரல் மௌத் வாஷ் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த மௌத் வாஷைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே மௌத் வாஷைத் தயாரித்துப் பயன்படுத்தினால், ஈறுகளில் உள்ள காயங்கள் விரைவில் குணமாகும். அதற்கு நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு அல்லது பேக்கிங் சோடாவை கலந்து, வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஈறுகளில் உள்ள காயங்கள் சீக்கிரம் சரியாக வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு பல முறை இச்செயலை செய்ய வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் உற்பத்தி தடுக்கப்படுவதோடு, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவுவதும் தடுக்கப்படும்.

மசாஜ் விட்ச் ஹாசில் ஆயில் அல்லது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் திரவத்தைக் கொண்டு மசாஜ் செய்தால், ஈறுகளில் உள்ள காயங்களினால் சந்திக்கும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஆள்காட்டி விரலில் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தொட்டு, ஈறு பகுதியை மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி வாய் முழுவதும் துலக்க வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கைவிரல் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம், ஈறுகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, விரைவில் காயங்கள் குணமாகும்.

டயட்டில் மாற்றம் ஈறுகளில் பிரச்சனை இருந்தால், பற்களில் ஒட்டிக் கொள்ளும் படியான ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதில் வெள்ளை பிரட், அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. வேண்டுமானால், முழு தானிய உணவுகளான முழு கோதுமை பிரட், வைட்டமின் சி நிரம்பிய உணவுப் பொருட்கள், நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். இப்படி டயட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும்

பிரஷ் பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் துலக்க வேண்டும். முக்கியமாக பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் மிகவும் மென்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் தினமும் பிளாஷிங் மற்றும் மௌத் வாஷ் கொண்டு வாயை சுத்தம் செய்த பின், பற்களைத் துலக்குங்கள். இச்செயலால் பற்களின் இடுக்குகளில் உணவுத்துகள்கள் தங்கி, பாதிப்பு ஏற்படுத்துவது தடுக்கப்படும்.

கிராம்பு எண்ணெய் இது மிகவும் பிரபலமான ஒரு ஈறு தொற்றிற்கான நிவாரணி. ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், கிராம்பு எண்ணெயில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து, ஈறுகளில் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதேப் போல் கிராம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலமும் ஈறுகளில் உள்ள வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி இஞ்சியை அரைத்து, சிறிது உப்பு சேர்த்து, அந்த பேஸ்ட்டை வீக்கம் உள்ள ஈறு பகுதிகளில் தேய்த்து, 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரால் வாயைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறைந்து, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

பேக்கிங் சோடா ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் வாயை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இப்படி காலை மற்றும் மாலையில் செய்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறைவதோடு, தொற்றுக்கள் இருந்தாலும் சரியாகிவிடும்

எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் வேண்டுமானால் 1-2 துளிகள் ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலந்து, வாயினுள் ஊற்றி சிறிது நேரம் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 2 முறை என, வலி முற்றிலும் போகும் வரை பின்பற்றுங்கள்.

விளக்கெண்ணெய் 1 கற்பூரத்தை பொடி செய்து, விளக்கெண்ணெயுடன் சேர்த்து பேஸ்ட் செய்து, வலியுள்ள ஈறுகளின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 2-3 நிமிடம் கழித்து, வாயை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், சீக்கிரம் ஈறு பிரச்சனைகள் நீங்கும். கற்றாழை ஜெல் கற்றாழையின் ஜெல்லை தொற்றுள்ள ஈறுகளின் மீது தடவி, எவ்வளவு நேரம் ஊற வைக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஊற வைத்து, பின் வாயைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள், ஈறுகளில் உள்ள வீக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா தொற்றுக்களை அழித்து சரிசெய்யும்.swollen gums

Related posts

கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்மைக் குறைவுப் பற்றி கவலைப்பட வேண்டாம், இதைப் பற்றி முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்!!!

nathan

தேவையான முதலுதவி பற்றி அறிந்து வைத்திருப்போம்!படிக்கத் தவறாதீர்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 உணவுகளும் இவைதான்..

nathan

உங்களுக்கு தெரியுமா கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ் …ஆண்மையை அதிகரிக்க இந்த இலையில் டீ போட்டு குடிங்க போதும்!

nathan

ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப கால முதுகுவலியைத் தவிர்க்க சில எளிய வழிகள்

nathan

தடவத்தான் தைலம்… தேய்க்க அல்ல

nathan