29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
1012 1537184984
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

கருமையான புள்ளிகள் ஒவ்வொருவரது சருமத்திலும் கட்டாயம் இருக்கும். என்ன, பலருக்கு அது சிறியதாகவும், கண்ணிற்கு புலப்படாதவாறும் இருக்கும். இன்னும் சிலருக்கு மிகப்பெரிய அளவில், அதுவும் முகத்தில் அசிங்கமாக காட்சியளிக்கும். ஒருவருக்கு கருமையான புள்ளிகளானது அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றுவதாலும், முதுமை காரணத்தினாலும் வரலாம். சொல்லப்போனால் இந்த கருமையான புள்ளிகளை முதுமைப் புள்ளிகள் என்றும் அழைக்கலாம்.

மேலும் கருமையான புள்ளிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கெமிக்கல்களாலும் சருமத்தில் அசிங்கமாக ஏற்படலாம். இந்த கருமையான முதுமைப் புள்ளிகளைப் போக்க மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், இவற்றைப் போக்குவது என்பது மிகவும் கடினமான ஓர் செயல் ஆகும். இருப்பினும் கருமையான புள்ளிகளை ஒருசில இயற்கை வழிகளை அன்றாடம் பின்பற்றுவதன் மூலம் மெதுவாக மறையச் செய்யலாம். உங்களுக்கு அந்த வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

கற்றாழை கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த கற்றாழை முகத்தில் உள்ள அசிங்கமான மற்றும் கருமையான புள்ளிகளை மெதுவாக மறையச் செய்வதில் வல்லது. அதற்கு கற்றாழையை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதில் கற்றாழையின் இலையில் உள்ள ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம் அல்லது கற்றாழையின் ஜூஸை பயன்படுத்தலாம். மேலும் கற்றாழை கலந்த பல ஹெர்பல் க்ரீம்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது மற்றும் இது கருமையான புள்ளிகளைப் போக்குவதில் சக்தி வாய்ந்த ஒன்று. ஆகவே தேங்காய் எண்ணெயை தினமும் தவறாமல் கருமையான புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள். இதனால் குறிப்பிட்ட காலத்தில் கருமையான புள்ளிகள் மறைய ஆம்பிப்பதோடு, மீண்டும் வராமலும் இருக்கும்.

ஆரஞ்சு தோல் பவுடர் அடுத்த முறை ஆரஞ்சு வாங்கினால், அதன் தோலைத் தூக்கிப் போடாதீர்கள். ஏனெனில் முகத்தில் இருக்கும் கருமையான புள்ளிகளைப் போக்குவதற்கு, அது பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து, கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ளுங்கள். பின் தேவையான போது ஒரு பௌலில் சிறிது ஆரஞ்சு தோல் பொடி, தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சருமம் புத்துணர்ச்சி பெறுவதோடு, காலப்போக்கில் புள்ளிகள் மறைவதையும் காணலாம்.

ஃபேஸ் பேக் இந்த எளிமையான மற்றும் ஈஸியான ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்க உதவியாக இருக்கும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு ஒரு பௌலில் சந்தன பவுடர், ரோஸ் வாட்டர், கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை கருமையான புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவுங்கள். நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையில் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பண்புகள் நிறைந்துள்ளன. இது ஒரு நேச்சுரல் ப்ளீச்சிங் ஏஜெண்ட். எலுமிச்சையைக் கொண்டு எளிமையான முறையில் முகத்தில் இருக்கும் கருமையான புள்ளிகளைப் போக்கலாம். அதற்கு எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள இடத்தில் நேரடியாக தடவுங்கள். இச்செயலால் முகத்தில் உள்ள கருமையான புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும்.

பால் பால் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்தை குளுமை அடையச் செய்யும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை மறையச் செய்யும். அதற்கு பாலை பச்சையாகவோ அல்லது மோர் வடிவிலோ பயன்படுத்தலாம். அதுவும் பாலை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வெங்காயம் மற்றும் பூண்டு சாறு வெங்காயம் மற்றும் பூண்டு சாறு, சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்க வல்லது. அதற்கு இந்த இரண்டு சாற்றினையும் ஒன்றாக கலந்து, கருமையான புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இதனால் கருமையான புள்ளிகள் மறைய ஆரம்பித்து, நாளடைவில் காணாமல் போய்விடும். முக்கியமாக இந்த செயலை தினமும் செய்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

வைட்டமின் ஈ ஆயில் முகத்தில் இருக்கும் கருமையான புள்ளிகளைப் போக்க உதவும் மற்றொரு வழி தான் வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது. வைட்டமின் ஈ எண்ணெயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கும். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள், சருமத்தின் நிறத்தை சமன் செய்வதற்கு உதவுவதோடு, கருமையான புள்ளிகளைக் குறைக்கவும் உதவும். வைட்டமின் ஈ எண்ணெய் பல்வேறு இயற்கை பொருட்களில் உள்ளது. அந்த பொருட்களைப் பயன்படுத்தி வந்தாலே, கருமையான புள்ளிகள் மறைய ஆரம்பித்து, ஒரு நல்ல மாற்றத்தை சருமத்தில் காணலாம். முக்கியமாக இந்த வைட்டமின் ஈ ஆலிவ் ஆயிலில் அதிகம் உள்ளது.

காய்கறிகள் காய்கறிகளான தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை தினமும் கருமையான புள்ளிகள் அல்லது முதுமைப் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால், அதில் உள்ள குளிர்ச்சித் தன்மை கருமையான புள்ளிகளை மறையச் செய்யும். தக்காளியைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதன் ஒரு துண்டை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது நேரம் தேய்த்து விடுங்கள். பின் சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஒரு துண்டு வெட்டி, அதைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தேயுங்கள். இப்படி இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தாலே கருமையான புள்ளிகளை முற்றிலும் போக்கலாம்.

பால் மற்றும் தேன் பேஸ்ட் ஒரு பௌலில் பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, நீரால் கழுவ வேண்டும். தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் மற்றும் பால் ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இந்த இரண்டு பொருட்களும் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த கலவை சருமத்திற்கு உடனடி பொலிவைக் கொடுப்பதோடு, சரும வறட்சியையும் தடுக்கும். குறிப்பாக இந்த கலவையை தினமும் ஒருவர் தங்கள் சருமத்தில் பயன்படுத்தி வந்தால், அசிங்கமான மற்றும் கருமையான புள்ளிகளை மெதுவாக மறையச் செய்யலாம்.

1012 1537184984

 

Related posts

குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

உங்களுக்கு முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? இதை முயன்று பாருங்கள்..

nathan

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

nathan

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு…

nathan

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan

அழகாய் இருக்கா தினமும் பத்து நிமிடம் செலவழிச்சால் போதும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்

nathan

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

nathan