36 8
முகப் பராமரிப்பு

இதோ பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்…!

அழகு
பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க பிளக்கிங், ஷேனிங், வேக்சிங் போன்ற முறைகளையும், முடியினை வேரோடு நீக்க நவீன மருத்துவச் சிகிச்சைகளையும் செய்து வருகின்றனர். ஆனால், இதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் எனவே இயற்கை முறையில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைக் தடுக்க சூப்பரான டிப்ஸ் உள்ளது.

சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை வளர்வதுண்டு. இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம்

முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.

ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.

மஞ்சளை பப்பாளியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.36 8

Related posts

உங்க கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்………

nathan

சூப்பர் டிப்ஸ் உங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா?

nathan

வெறும் வாழைப்பழத்தை 12 நாட்களுக்கு உட்கொண்டால் போதும்!…

sangika

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan