30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

பாட்டி வைத்தியத்துல வாய்ப்புண்ணுக்கு இவ்ளோ மருநு்து இருக்கா?அப்ப இத படிங்க!

மௌத் அல்சர் என்பது ஒரு கடுமையான வாய் புண் இது பொதுவாக இடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவந்த புண்ணாக ஏற்பட்டு இருக்கும். இது பொதுவாக நாக்கு, உதடு, ஈறுகளில் அல்லது கன்னத்தின் உள்பக்கம் ஏற்படும்.இதனால் எரிச்சல் வலி மற்றும் உணவு சாப்பிடுவதிலும் சிரமம் இருக்கும். சாதாரணமாக அது ஒரு வாய் புண் சரியாக 7 முதல் 10 நாட்களுக்கு எடுக்கும். இது சிறிய வடிவிலும் ஏற்படலாம் பெரிய வடிவிலும் ஏற்படலாம்.

பாட்டி வைத்திய முறை
இந்த வாய்ப்புண்ணை ஏதாவது மாத்திரைகள் சாப்பிட்டு மேலும், புண்ணாக்கிக் கொள்ளாமல், வீட்டிலுள்ள பொருள்களை வைத்து பாட்டி வைத்திய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேங்காய் பால்
தேங்காய்ப்பால் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அதில் வாய்ப்புண்ணையும் ஆற்றும் சக்தி மிக அதிகமாகவே உள்ளது. தேங்காய் பால் எடுத்து அதை வைத்து தினமும் 3-4 முறை வாய் கொப்புளிக்கவும்.

ஜில்- ஹாட் வாட்டர்
ஒரு டம்ளர் குளிர்ந்த நீரும், ஒரு டம்ளர் சூடான தண்ணீரும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டையும் மாற்றி மாற்றி வாய் கொப்புளிக்கவும். இது மௌத் அல்சர்க்கு நல்ல தீர்வாக அமையும்

வெந்தயக் கீரை
2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் 1 கப் வெந்தய கீரை சேர்த்து நீக்கி விடவும். இதை சிறிது நேரம் அப்படியே மூடி வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்புளிக்கவும்.

தனியா விதை
1 கப் தண்ணீரில் 1 தேக்கரண்டி தனியா சேர்த்து கொதிக்கவிடவும். லேசாக சூடானதும் வடிகட்டி இதை வைத்து வாய் கொப்புளிக்கவும். ஒரு நாளைக்கு 3-4 முறை இதை பின்பற்றவும். தக்காளி சாறு
பச்சை தக்காளி சாப்பிடுவது வாய் புண்களை அகற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு 3-4 முறை தக்காளி பழச்சாறு கொண்டு வாய் கொப்புளிக்கவும். அதேபோல ஒரு நாளைக்கு 3-4 முறை பச்சை தக்காளி அல்லது தக்காளிச்சாறு சாப்பிடவும். இது வாய் புண்களுக்கு சிறந்த வீட்டு வைத்தியம்.

மஞ்சள் பொடி
1 தேக்கரண்டி கிளிசரைனில் மஞ்சள் பொடி சேர்த்து அதை பேஸ்டை அப்ளை செய்யவும். தண்ணீரில் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து அது வெதுவெதுப்பான பிறகு வாய் கொப்பிளிக்கவும்.

துளசி
5-6 துளசி இலையை மென்று சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடிக்கவும். வாய் புண் ஏற்படும் போதெல்லாம் இதை 5-6 முறை செய்யவும்.

கற்பூரம்
கற்பூரம் மற்றும் கற்கண்டு கலவையை அப்ளை செய்து வர மௌத் அல்சர் சீக்ரம் குணமடையும். கற்கண்டை உடைத்துப் போட்டால் காற்றின் ஈரப்பதத்தில் அது கரைய ஆரம்பித்து விடும். அதில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து குழைத்து வாய்ப்புண்ணில் தடவ சீக்கிரம் குணமடையும்.

வாழைப்பழம்
வாழைப்பழம் மற்றும் தயிர் காலையில் சாப்பிடுங்கள். சூடான மற்றும் காரமான உணவை உண்ணாமல் தவிர்க்கவும். அதேபோல மதிய வேளையில் வாழைப்பழத்தோடு சிறிது தயிர் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தாலும் வாய்ப்புண் குணமடையும்.

Related posts

காயங்களை போக்கும் கற்றாழை!

nathan

கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!

nathan

டூ வே கண்ணாடியை கண்டறிவது எப்படி?

nathan

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா பல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

nathan

இந்த பூவின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா ??? அப்ப உடனே இத படிங்க…

nathan